நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல்
உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும்
அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட
அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக
வளருகின்றன.
பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின்
இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள்
அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற
வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர்
செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி
பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன்
பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.
இளமையுடன் இருக்கலாம்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON