Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பந்திப்பூர் தேசியப் பூங்கா - பந்திப்பூர் புலிகள் சரணாலயம்- Bandipur National Park - bandipur tiger reserve
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பந்திப்பூர் தேசியப் பூங்கா ( ஆங்கிலம் : Bandipur National Park 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . இந்த தேசியப் பூங்காவில் புலிகள் ...

பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசியப் பூங்காவானது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது. 1941 ஆம் ஆண்டிலேயே இப்பகுதி வேணுகோபால் வனவிலங்குப் பூங்கா என்ற பெயரால் அறியப்பட்டது. தமிழ்நாட்டின் முதுமலையும் கேரளாவின் வயநாடும் இதற்கு எல்லைகளாக உள்ளன. 

இந்தத் தேசியப் பூங்காவானது பல்வேறு வகையான வன விலங்குகள் வாழும் இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களின் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் மரணமடைகின்றன. எனவே இங்கு வாகனங்கள் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளது. இந்தப் பூங்கா 874 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ளது. தக்காண பீடபூமியும் மேற்குத் தொடர்ச்சி மலை இணையும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாய் இப்பூங்காவானது பல்லுயிரிகளின் முக்கிய வாழ்விடமாய் உள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை பகுதியில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்து உள்ளது. பந்திப்பூர் தேசிய பூங்கா பண்டிபூர், முதுமலை, வயநாட் ஆகிய இம்மூன்றும் சேர்ந்த வனப்பகுதி தென்னிந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய காட்டுயிர் வனப்பிரதேசமாக அமைந்துள்ளது. இதில் உலகப்புகழ் பெற்றஅமைதிப் பள்ளத்தாக்கு' அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பாதுகாப்புப்பகுதியும் அடங்கும். அரிய விலங்குகள் கபினி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பண்டிபூர் வனப்பகுதி பல காட்டுவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது

சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன. கபினி ஆற்றின் பல துணை ஒடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன. சில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கௌதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன

இயற்கையின் வரப்பிரசாதம் தாவர வகைகளில் சந்தன மரம் , கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம், விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் பண்டிபூர் வனப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றன.

எப்படி செல்வது : - குறைந்த கட்டணத்தில், நிறைந்த வசதியுடன் கர்நாடக அரசு பேருந்துகள் பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இது தவிர பயணிகள் வேன்கள், சொகுசு கார்கள் போன்றவற்றை பெங்களூர் அல்லது மைசூரிலிருந்து வாடகைக்கு எடுத்தும் செல்லலாம்

புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சவாரி மூலம் வனப்பகுதிக்குள் அழைத்து சென்று அதன் அழகையும், வனவிலங்குகளையும் ரசித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் பரந்து விரிந்து, அடர்ந்து காணப்படும் பந்திப்பூர் வனப்பகுதிக்கு சவாரி செல்வதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் தங்கி வனப்பகுதியின் அழகை ரசிக்கும் வகையில், அங்கு ஏராளமான ரெசார்டுகள் அமைந்துள்ளன.

பந்திப்பூர் வனப்பகுதியில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் ரூ.250 வசூலிக்கப்பட்டு வருகிறதுவனப்பகுதியில் சவாரி செல்லும் கட்டணம் ரூ..300–ஆகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது அதேபோல, வெளிநாடு சுற்றுலா பயணிகளை சவாரி அழைத்து செல்வதற்கான கட்டணம் ரூ.1,500–ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, பந்திப்பூர் வனப்பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள ரெசார்டுகளின் கட்டணம் தற்போது ரூ.2,500–ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு ரூ.5,000–ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது

Subash

07 Jan 2021

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...