Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவைகள்??
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத...

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. டேப்ளட் பிசியின் அளவு:
டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாமல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி, அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் காலக்ஸி டேப் முதல் வெரிஸான் வரை 7 அங்குல திரை கொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்படுபவருக்கு, இது உகந்ததாகவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுடன் டேப்ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக்கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே.
2. ஸ்டோரேஜ் அளவு:
ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத் துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலாக நினைவகம் வேண்டும் எனில், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவு படுத்த வேண்டும் எனில், இவற்றில் வெளியிலிருந்து இணைத்துப் பயன்படுத்தக் கூடிய நினைவகத்தைத் தான் நாட வேண்டும். அப்படி யானால், அதற்கான எஸ்.டி. அல்லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இயக்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினைவகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பிமோடோ (bModo) என்னும் விண்டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தாலும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்பதால், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.
விண்டோஸ் 7 அடிப்படையில் இயங்கும் சி.டி.எல். (CTL) டேப்ளட் 250 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
3.பேட்டரி திறன்:
டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட்டிருக்கும் பேட்டரி களாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப்பட்டு, பெயர் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்கலாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிகள் எனில், 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகின்றன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.
4. 3ஜி அல்லது வை–பி மட்டுமா?
சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொர்க் இணைப்பு என ஏதேனும் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும்போது, இதில் ஒரு தெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
5. சிஸ்டம்:
ஆண்ட்ராய்ட் போல ஓப்பன் சிஸ்டம் அல்லது விண்டோஸ் 7 போல குளோஸ்டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ளட் பிசியில் சில வரையறைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப்ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தேவைகளின் அடிப்படையில்தான் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.
6.உள்ளீடு வழிகள்:
ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள, ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெரிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க ஒரு தடையாகவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளுடூத் கீ போர்டு பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க டேப்ளட் பிசிக்களில், யு.எஸ்.பி. போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டுகளைக் கொண்டு, விரைவாகச் செயல்படலாம்.
7. விலை:
மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விலையின் அடிப்படையிலேயே எந்த சாதனத்தினையும் வாங்கிப் பயன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபைல் போன் மற்றும் சில சாதனங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் விற்பனைக்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.
8. சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:
ஐ–பேட் சாதனம் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. எனவே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல்ல என்ற கருத்தினை அனைவரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும் பாலான நிறுவனங்களின் படைப்புகள் கேமராவினைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், அதில் எத்தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலாம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ–பேட் சாதனத்திற்கான புரோகிராம்கள் என எடுத்துக் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இதனாலேயே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை வாங்குவது என்றும் முடிவு செய்திடலாம்.
10.ஒத்திசைந்த செயல்பாடு:
ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டேப் போன்ற டேப்ளட் பிசிக்கள், ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசியைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப்ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவினை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வருகையில், முடிவினை எடுக்க இது உதவியாக இருக்கும்.
நன்றி!!!

24 Apr 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...