Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
விளம்பரங்கள் பார்க்கிறோமே… கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வர...

விளம்பரங்கள் பார்க்கிறோமே… கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு… கரண்ட் பில் கட்டியாச்சுன்னு…. இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர… இந்த நேரத்தை எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா… அதுல முதலிடத்த நெட் பேங்கிங் தான் பிடிச்சுக்கும்.
இப்பல்லாம் பெரும்பாலான கம்பெனிகள் நமது சம்பளத்தை நேரடியாக நமது வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றன. அதனால் சம்பள பணத்தை கொண்டு போய் பேங்க்கில் செலுத்த வேண்டிய வேலை மிச்சம். தேவைக்கு மட்டும் அப்பப்போ எடுத்துக் கிடலாம். இதனால் வங்கிகளுக்கும் லாபம். குறைந்தது 2, 3 நாளைக்காவது நம்ம அக்கவுண்ட்ல பணம் இருக்கும்ல.. இது தவிர நெட் பேங்கிங் மூலம் வீட்டில் இருந்தபடியே ஏகப்பட்ட வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். கரண்ட் பில். மொபைல், டெலிபோன் பில் கட்டலாம். ரயில், டிராவல்ஸ் பஸ், பிளைட் டிக்கெட்… இதெல்லாம் வீட்டில் இருந்தபடியே புக் பண்ணலாம். இதற்காக பல கிமீ தூரம் டூவீலரிலோ, பஸ்சிலோ செல்ல தேவையில்லை. பெட்ரோல் ரொம்ப ரொம்ப மிச்சமாகும். டாக்ஸ் பே பண்ணலாம்..
தொலைவில் உள்ள நமது உறவினர்களுக்கு எந்த நேரத்திலும், நடு ராத்திரியா இருந்தாலும் உடனே அவங்க அக்கவுண்ட்டில் பணம் செலுத்தி விடலாம். இதற்கு பணம் செலுத்துபவருக்கு மட்டும் நெட் பேங்கிங் வசதி இருந்தால் போதும்.
பணம் பெறுபவருக்கு வங்கியில் கணக்கு இருந்தால் மட்டும் போதும். அவரது கணக்கு எண்ணில் நேரடியாக நமது பணம் சேர்ந்து விடும். டிடி செலவு மிச்சம். இதில் 2 லட்சத்திற்கு மேல் பணம் பரிமாற்றம் செய்ய ஒரு முறை, அதற்கு குறைந்த தொகையில் பணம் பரிமாற்றம் செய்ய ஒரு முறை என எளிதாக 2 முறைகள் உள்ளன. ஆர்டிஜிஎஸ் முறையில் (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்) உடனடியாக மற்றொருவரின் கணக்கில் ரூ2 லட்சத்தை செலுத்த முடியும். என்ஈஎப்டி முறையில் (நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர்மர்) அதற்கும் குறைவான தொகையை செலுத்தலாம்.  இதற்கு கம்ப்யூட்டர்தான் தேவை என்பதில்லை. மல்டி மீடியா மொபைல் போன் போதும். ஸீ5 ஆயிரத்துக்கு இந்த வகை போன்கள் கிடைக்கின்றன. இதனால் உள்ளங்கையில் இருந்து உங்கள் வங்கி கணக்கை அப்பப்ப செக் பண்ணிக்கலாம். நாமே பாஸ்வேர்டு வைத்துக் கொண்டுதான் இந்த கணக்கை இயக்க வேண்டும். இந்த பாஸ்வேர்டை நினைவில் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். எதிலும் எழுதி வைத்திருக்க கூடாது. இதிலும் 2, 3 அடுக்கு பாஸ்வேர்டு வசதி உண்டு. ஓடிபி எனப்படும் 3 நிமிடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்வேர்டுகளையும் கடைசி கட்ட பரிமாற்றத்தின் போது, வங்கிகள் நமது செல்போனுக்கு அனுப்புகின்றன. இதற்கு நமது செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இது கட்டாயம். என்ன நீங்களும் நெட் பேங்கிங் பக்கம் போக போறீங்களா… ஆல் தி பெஸ்ட்.
நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top