மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும்
டாக்டர் ஜி,யூ,போப்
அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு
ஒரு தனிப்பாசம் உண்டு. தமிழ் கற்tu சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு
அறிமுகப்படுத்தினார். மொழிந்தார் போப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய
மேலைநாட்டு புனிதர்களான St.Paul , அசிசி நாட்டுத் துறவி (St.
Francis Assisi) பிரான்சிஸ்
போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் –
“In the whole legendary history of this sage … … … there stands out a real
historical character, which seems to be a mixture of that of St.Paul and of
St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East
might had become”. தடித்த
எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில்
ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும்
போப்பின் திருவாசகக் காதல் குறித்து திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும்
கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில்
ஒரு திருவாசகப் பாடலை எழுதுவார், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு
திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது
விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர்
ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது
மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக
அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர், திருவாசகத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம்
அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக
நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார்
ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில்
திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப்
பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக்
காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி
இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.
“அந்த கிறித்துவ இறைபணியாளர்,
தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ
வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின்
பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று
ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த
உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.