Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: குமரியில் ஓணம் பண்டிகை
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
                      குமரியில் ஓணம் பண்டிகை  Onam Festival @ Kanyakumari Dist கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை   10 ...
                     குமரியில் ஓணம் பண்டிகை  Onam Festival @ Kanyakumari Dist
கேரள மக்களின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை  10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் , 10 வது நாள் (செப்டம்பர் 7) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகாபலி மன்னனை நினைவு கூறும் வகையில் இவ்விழா நடைபெற்று வருகிறது. கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் அதிகளவில் வெகு விமரிசையாக ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும். 10 நாட்கள் ஓணம் பண்டிகையை
வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிடுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோண நட்சத்திரம் அன்றும் ஓணம் கொண்டாடப்படும்.

மலை நாடான கேரளத்தை மகாமலி மன்னன் ஆட்சி செய்து வந்தார். நீதி தவறாத இவரது ஆட்சியில் நாடு செழிப்பாக காணப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மன்னனின் வள்ளல் தன்மையையும், ஆணவத்தையும் சோதித்து பார்க்க மகா விஷ்ணு விரும்பினார். இதையடுத்து வாமன உருவம் எடுத்து வந்த மகாவிஷ்ணு மன்னனிடம் தனது காலடிக்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்றார். மன்னனும் வந்திருப்பது மகா விஷ்ணு என அறியாமல் தானம் தருவதாக கூறினார்.

முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடியை அளக்க இடம் இல்லை. அப்போது மகாபலி மன்னன் சிரம் தாழ்ந்தார். அவரது தலையில் மகாவிஷ்ணு கால் வைத்தபோது மண்ணில் புதைந்தார் மன்னர்.அத்தருணத்தில் நாட்டு மக்களை ஆண்டுக்கு ஒரு முறை பார்க்கும் வரம் தரவேண்டும் எனக் கேட்டார். மகா விஷ்ணுவும் வரத்தை அளித்தார்.


இதன் படி தான் நாட்டு மக்களை பார்க்க மகாபலி மன்னன் (மாவேலி மன்னன்) திருவோண நாளன்று வருவதாகவும், அதனை வரவேற்கவும் ஓண விழா கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது. வீடுகளில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சல் கட்டி பாட்டு பாடி மகிழ்வர். திருவாதிரைக்களி நடனமும் ஆடுவதுண்டு. பத்தாம் நாள் திருவோணத்தன்று மூன்று வகை பாயாசத்துடன் கூடிய சிறப்பு உணவு வகைகள் என ஓண விழா களை கட்டும். பள்ளி, கல்லூரிகளில் இனி 10 நாட்கள் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

ஓணம் தொடக்கத்தையொட்டி குமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் இன்று காலை ஓண தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடந்தன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரண்மனை முற்றத்தில் அத்தப்பூ கோலமிடப்பட்டது. இன்று முதல் ஓணம் பண்டிகை வரை பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைன்களில் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது.

அரண்மனை சார்பில் ஊழியர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஓண விருந்து வழங்கப்படுகிறது. 6, 7, 8ம் தேதிகளில் பழமையான அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. ஓண விழாவை கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
  

ஓண பண்டிகை தொடங்கியதையொட்டி 10 நாட்களும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலமிடுவர். இதனால் பூக்களின் தேவை அதிகரிக்கும். குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். ஓணத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பிரசித்தி பெற்ற குமரி மாவட்ட தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று முதல் வியாபாரம் சூடுபிடித்தது. நேற்று காலையில் இருந்தே வியாபாரிகள் குவிந்தனர். இன்று காலையிலும் வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். மழை பெய்த போதும் வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்தது.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top