குழந்தை பிறந்தது முதல் ஏழு வயது எய்தும் வரையிலான பருவமே இந்த பேதைப் பருவமானது. ஏன், எதற்கு, எதனால் எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்து பெற்றொரையும், ஆசிரியரையும் திணறடிக்கும் இந்த வயது மழலைகளே என்றுமே நம் நெஞ்சத்தை விட்டு நீங்காத பசுமை நினைவுகளை நமக்கு விட்டுச் செல்லும் செல்வங்கள்.
பள்ளிக்கு சென்று பாடம் படித்து, வீட்டிற்கு வந்து தான் செய்யும் குறும்புகளுக்கெல்லாம் பெற்றோரிடம் அடிவாங்கி முழிக்கும் பருவமே இந்த பெதும்பை பருவம். தன் சின்னஞ்சிறு நண்பர் கூட்டத்தில் சண்டைப் போட்டும், கை கோர்த்து நடந்தும், நடப்பு உலகை மறந்தும், தன்னுடைய உலகில் சிறகடித்துப் பறக்கும் இந்தப் பருவமானது 8 முதல் 11 வயது வரையிலானது.
பூ பூப்பதுபோல் இந்த வயதில் பெண்மை பூப்பெய்து, தாய்மாமன் தரும் தாவணியை காட்டும் பருவமே இது. தன்னுடைய உலகில் சிறகடித்து பறந்த இவளின் சிந்தனைகளுக்கு, வெளி உலகத்தின் வெளிச்சம் புது அர்த்தங்களை கற்றுக் கொடுக்கும் காலம் இது. 15 வயதை எய்தும் பெண்ணின் பருவமே மங்கை என பெயர் பெருகிறது.
தான் சிந்திக்க ஆரம்பித்தவுடனே தான் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரி என்ற மாயையைத் தரும் பருவம்தான் மடந்தை பருவம். 18 வயதைக் குறிக்கும் இந்த பருவமே பெண்கள் தங்கள் அடுத்த கட்ட வாழ்க்கை எவ்வாறு அமையப்போகின்றது என்பதை சரி வர முடிவெடுக்க வேண்டி எடுத்து வைக்கும் முதல் அடி இந்த பருவத்தில்தான் தொடங்குகிறது.
தான் எந்த சுப காரியங்களுக்குச் சென்றாலும், ' அப்புறம் அடுத்து உன் கல்யாணம் எப்போ? வயசாகிகிட்டே போகுது...' என விஷேசம் தொடங்கி முடியும் வரை தான் பார்க்கு எல்லா பொக்கை வாய் பாட்டிகளுக்கும் பதில் சொல்லும் காலம் இது. இதற்கு பெற்றோர்கள் வேறு ' எங்க சொன்னா கேட்டாதானே...' என பெருமூச்சு விட 'அதற்குள் திருமணமா?,' என 25 வயதான பெண் திரு திருவென முழிக்கும் காலம் இது.
தான் விரும்பும் மணாளனை மணமுடித்து, பெற்றொர்களுக்கு பேரப்பிள்ளைகளை கண்ணில் காட்டி வீட்டில் விளையாடச் செய்யும் பருவம் இது. பெற்ற பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து அவர்களின் வாழ்க்கையை பயணத்தை செப்பனிட்ட சாலைகளில் மட்டுமே கடக்க வேண்டும் என உறுதி பூண்டு தன் வாழ்க்கையை அர்பணிக்கும் 25 வயது முதல் 40 வயதிலான பருவமே தெரிவை எனக் கூறப்படுகிறது.
தன் பிள்ளைகளை கரை சேர்த்து விட்டோம் என நிம்மதி பெரிமூச்சு விடும் பருவமே இது. தான் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, தன்னுடைய மூன்றாவது தலைமுறையை உச்சி மோர்ந்து, அந்த மழலையின் சிரிப்பில் இன்னொரு மழலையாக கலந்து இன்பமுறுவதே 40 வயதை தாண்டும் பேரிளம் பெண் பருவம்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.