Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: Fn key மற்றும் Function Keys பற்றி உங்களுக்கு தெரியுமா?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உங்களுக்கு Fn key மற்றும் Function Keys பற்றி தெரியுமா?  என்ன வேடிக்கை? இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. ...

உங்களுக்கு Fn key மற்றும் Function Keys பற்றி தெரியுமா? 


என்ன வேடிக்கை? இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும்.

நோட்புக் கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஒரு வகையான சிறப்பு செயல்பாடுகளைத் தரும் கீ தான்Fn key (FuNction key) கீ. வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் கீ போர்டில் மேலாகத் தரப்பட்டுள்ளவை Function Keys (typically F1 F12 on a regular desktop keyboard) ஆகும்.

Fn key என்பது ஒருவகையான வரையறை செய்திடும் மாடிபையர் கீ ஆகும். இது கீ போர்ட் செயல்பாட்டில், இரண்டாம் நிலை செயல்பாட்டினைத் தரும். நோட்புக் கம்ப்யூட்டரில், கீ போர்டில் மேலாக, சில அடையாளக் குறியீடுகளைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.

இவை சிஸ்டம் செயல்பாடுகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, 1 key + FN என்ற கீகள் மானிட்டர் டிஸ்பிளே ஒளியினைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

வை-பி இயக்கத்தினை தொடங்கவும், நிறுத்தி வைக்கவும் 5 key + FN கீகள் பயன்படுத்தப்படுகின்றன. Function Keys என்பவை F1 முதல் F12 வரை தரப்பட்டுள்ளன.

இவை ஹார்ட்வேர் கீகளாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அல்லது அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், வரையறை செய்யப்பட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, F1 ஹெல்ப் பக்கங்களைக் காட்டும். F5 இயக்கத்தினை ரெப்ரெஷ் செய்திடும். இந்த பங்சன் கீகளை மற்ற ஆல்ட், கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளுடன் இணைத்து வேறு சில செயல்பாடுகள் மேற்கொள்ள பயன்படுத்தலாம்.

தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top