அவரோடு முதல் வகுப்பில்
இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் பிரபலங்களும் தொழிலதிபர்களும்
கோடீஸ்வரர்களும் இருந்தனர். இங்கிலாந்தில் அப்போது வேலை வாய்ப்புகள் குறைவாக
இருந்ததால் அமெரிக்காவுக்கு வேலை தேடி பலர் குடிபெயர்ந்துகொண்டிருந்தனர்.
டைட்டானிக் கப்பலின் மூன்றாம் வகுப்பில் இருந்த
721 பயணிகளில் பெரும்பாலானோர் அடித்தட்டு வகுப்பினர்.
மதியம் பயணம் தொடங்குவதாக
இருந்தது. கேப்டன் ஸ்மித்,
காலை ஏழு மணிக்கே கப்பலுக்கு வந்துவிட்டார். தட்ப வெப்ப நிலை,
புயல் சின்னங்கள், அலைகளின் போக்கு
ஆகியவைபற்றி மாலுமிகளிடம் அலசினார். அனைத்தும் கச்சிதமாக இருந்தன.
பயணிகள் குடும்பத்தினரோடு ஒன்பது
மணிக்கு வரத் தொடங்கினார்கள். மொத்தம் 2223 பயணிகள். கப்பலின் வசதிகளையும், சொகுசுகளையும்
பார்த்து எல்லோர் மனத்திலும் பிரமிப்பு பொங்கியது. வழியனுப்ப வந்தவர்களின்
மனத்தில் பிரிவுச் சோகத்தோடு, தாங்களும் இந்த உல்லாசபுரியில்
பயணம் செய்ய முடியவில்லையே என்னும் பொறாமையும் இருந்திருக்கும்.
மதிய நேரம். டைட்டானிக் சைரன்
முழங்கியது. வரலாற்றுப் பயணம் தொடங்கும்போதே சின்னத் தடங்கல். டைட்டானிக் அருகில், நியூ
யார்க் என்னும் கப்பல்
நிறுத்தப்பட்டிருந்தது. பிரமாண்டமான டைட்டானிக் கிளம்பியபோது அலைகள் பல அடி
உயரத்துக்கு மேலே எழுந்ததால், அந்த வேகத்தில் நியூ யார்க்
கப்பல், டைட்டானிக் அருகே நான்கு அடி வித்தியாசத்தில்
நகர்ந்து வந்துவிட்டது. கேப்டன் ஸ்மித் டைட்டானிக்கை நிறுத்தச் சொன்னார். ஒரு மணி
நேரம் தாமதமாக டைட்டானிக் புறப்பட்டது.
சில நிமிடங்களில் எல்லோரும்
இந்தத் தாமதத்தை மறந்துவிட்டார்கள். சாப்பாட்டுப் பிரியர்கள் அறுசுவை உணவுகளை
ரசித்தார்கள். போதை விரும்பிகள் வகை வகையான ஒயின்களை ரசித்தார்கள். இலக்கியப்
பிரியர்கள் நூலகத்தில் ஒதுங்கினார்கள். குழந்தைகள் அமைதியான கடலையும், வருடிச்
செல்லும் மெல்லிய காற்றையும் அனுபவித்தார்கள்.
ஏப்ரல் 14, 1912.
நள்ளிரவு மணி 11.40. பீட்டர் ரெனிஃப் என்னும் அமெரிக்க இளம்பெண் தன் கணவன், இரண்டு சகோதரர்கள்,
குடும்ப நண்பர்கள் ஆகியோரோடு பிரயாணம் செய்துகொண்டிருந்தார். அவர்
மனத்தில் இனம் புரியாத கலக்கம், குழப்பம். தூக்கமும்
கண்களைத் தழுவ மறுத்தது. திடீரென டைட்டானிக் லேசாக அதிர்ந்தது. இத்தனை பெரிய
கப்பல் எப்படி அதிரும்? நான்தான் காரணமில்லாமல்
பயப்படுகிறேன் என்று ரெனிஃப் மனதைத் தேற்றிக்கொண்டார்.
அடுத்த சில நிமிடங்களில்
மாலுமிகள் இருந்த அறையில் ஒரே சத்தம்! அங்கும் இங்கும் ஓடும் தடதட காலடி ஓசை. தன் பயம் வெறும் பிரமை இல்லை. ஏதோ அசம்பாவிதம்
நிச்சயமாக நடக்கப்போகிறது என்று தன்
கணவனைத் தட்டி எழுப்பினாள். சிறிது நேரத்தில் அறிவிப்பு வர ஆரம்பித்தது. டைட்டானிக்
போகும் பாதையில் பல பனிப்பாறைகள் இருப்பதால் கவனமாகப் போகவேண்டும்!
ஆனால் ஏனோ, மாலுமி
வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. திடீ ரென, ஒரு பெரிய
பனிப்பாறையைப் பார்த்ததும், கப்பலைத் திருப்பினார். இதனால்,
பாறை கப்பலை நேரடியாக மோதாமல் முன்பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள
மேல் சுவரில் உராய்ந்து உடைந்தது. 26 மாதங்கள் வல்லுநர்கள் செதுக்கிச் செதுக்கி
உருவாக்கிய கப்பல், ஆயிரம்
தரக்கட்டுப்பாடுச் சோதனைகளைத் தாண்டிவந்த கப்பல், பனிப்பாறை
மோதலில் தடுமாற ஆரம்பித்தது.
கப்பலின் முன்பகுதி அறைகளுக்குள்
குபுகுபுவென்று கடல் வெள்ளம் புகுந்தது. தான் ஓர் இணையற்ற தலைவன் என்பதை கேப்டன்
ஸ்மித் நிரூபித்தார். டைட்டானிக்கின் வாழ்நாள் இன்னும் சில மணி நேரங்கள்தாம் என்று
அவருக்குத் தெரிந்தது. கப்பல் மூழ்கும் முன் அதிகமான நபர்களைக் காப்பாற்ற வேண்டும்
என்று ஸ்மித் முடிவெடுத்தார். ரேடியோ
மூலம் செய்திகள் பறந்தன. ஒளியைச் சிதறடித்தல், ராக்கெட் வெடித்தல் போன்ற செயல்கள்
மூலமாகப் பிற கப்பல்களுக்குத் தங்கள் நிலையைத் தெரிவித்து உதவி தேடும் முயற்சிகள்
தொடங்கின. டைட்டானிக் ஆழமான பகுதியில் இருந்ததால், உதவுவதற்கு
அருகில் ஒரு கப்பலும் இல்லை.
குழந்தைகளையும் பெண்களையும்
முதலில் தப்பிக்க வைக்கவேண்டும் என்று ஸ்மித் ஆணையிட்டார். காப்புப் படகுகள்
கடலில் இறக்கப்பட்டன. அப்போதுதான் அந்த மாபெரும் தவற்றை அவர்கள் உணர்ந்தார்கள்.
3,547 பேர் பயணிக்கும் கப்பலில் 32 காப்புப் படகுகள் இருக்கவேண்டும். இருந்ததோ 20
மட்டுமே. இவற்றில் 1,178 பயணிகள் மட்டுமே தப்பிக்கமுடியும். அதுவும், கட்டுப்பாட்டோடு
மக்கள் ஏறினால்தான். தள்ளுமுள்ளு நடக்கும்போது கட்டுப்பாட்டை எதிர்பார்க்கமுடியுமா?
கப்பல் ஊழியர்களுக்கும் விபத்துக்களை எதிர்கொள்ளப் பயிற்சிகள்
கொடுக்கப்படவில்லை. இதனால், 498 பயணிகளும், 215 கப்பல் ஊழியர்களும் மட்டுமே தப்பிப் பிழைக்க முடிந்தது. இரண்டு மணி
நாற்பது நிமிடங்களில் டைட்டானிக் முழுதாகக் கடலில் மூழ்கியது. 1357 ஆண்கள்,
106 பெண்கள், 53 குழந்தைகள் உயிரிழந்தனர்.
டைட்டானிக் சோக காவியம் மட்டுமல்ல, ஒரு
வீரசாகச வரலாறும்கூட. ஏன் தெரியுமா? சாவை நெருங்குகிறோம்
என்று தெரிந்தும் கப்பல் ஊழியர்கள் தங்களைப்பற்றிக் கவலைப்படாமல் பயணிகளைக்
காப்பாற்ற முயற்சி செய்தார்கள். மொத்த 888 ஊழியர்களில் 696 ஊழியர்கள்
உயிரிழந்தார்கள். காப்புப் பணிகளைக் கடைசிவரை தலைமையேற்ற கேப்டன் ஸ்மித் கப்பலோடு
மூழ்கினார்.
இந்தத் தியாகமும் அர்ப்பணிப்பும்
கொஞ்சமும் இல்லாமல் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக இருந்தவர்
ஒருவர். அவர்,
கப்பலின் உரிமையாளர், ப்ரூஸ் இஸ்மே. காப்புப்
படகில் ஏறித் தப்பித்த இஸ்மே சக பயணிகள்போல் தப்பித்து, ஏப்ரல்
18 அன்று நியூ யார்க் வந்து சேர்ந்தார். அமெரிக்கா உருவாக்கிய சிறப்பு
நீதிமன்றமும், மக்கள் மன்றங்களும் இஸ்மேயின்
பொறுப்பின்மையைக் கடுமையாகச் சாடின. மக்கள் பார்வையிலிருந்து ஒதுங்கிய இஸ்மே,
1937ல் மரணமடைந்தார்.
1985 ல் விபத்து நடந்த இடத்தில்
ஆய்வுகள் தொடங்கின. விபத்தின் பல அம்சங்கள் மக்கள் பார்வைக்கு வந்தன. ஆனால், 1997ல்
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம்தான்
விபத்தின் தாக்கத்தை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு சேர்த்தது.
கப்பல் குறிப்புகள்
1900களில், நெடுந்தொலைவுப்
பயணங்களுக்கு மக்கள் கப்பல்களையே பயன்படுத்தினார்கள். ஒயிட் ஸ்டார் லைன்ஸ்,
இங்கிலாந்தின் நம்பர் 1 கப்பல் கம்பெனி. அவர்களிடம் 29 கப்பல்கள்
இருந்தன. 1907 வாக்கில், கம்பெனிக்குப் பல பிரச்னைகள்
உருவாயின. அதன் தலைவர் ப்ரூஸ் இஸ்மே (Bruce Ismay), பங்குதாரரான
அமெரிக்கக் கோடீஸ்வரர் மார்கன் ஆகிய இருவரும் ஒரு மாற்று வழியைக் கண்டறிந்தார்கள்.
இங்கிலாந்தின் குனார்ட், ஜெர்மனியின்
ஹாம்பர்க், லாய்ட் ஆகிய நிறுவனங்கள் பிரமாண்டமான சொகுசு
கப்பல்களை அறிமுகம் செய்திருந்தன. இந்தக் கப்பல்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தன.
அவர்களுடைய வழியில், தாமும் இரண்டு சொகுசுக் கப்பல்களை
உருவாக்கலாம் என்று முடிவு செய்தது ஒயிட் ஸ்டார் லைன்ஸ்.
தி1909 ம் ஆண்டு, ஆர்.எம்.எஸ்
டைட்டானிக்கின் கட்டுமானம் தொடங்கியது. இரண்டாவது கப்பலின் பெயர், ஒலிம்பிக். இரண்டையும் உருவாக்க 26 மாதங்கள் தேவைப்பட்டன. 882.75 அடி
நீளம், 92.5 அடி அகலம், 175 அடி உயரம்,
46,000 டன் எடை. நிர்மாணச் செலவு, இன்றைய
கணக்கில் 3352 கோடி ரூபாய்.
திடைட்டானிக் கப்பலில் 888
ஊழியர்கள் இருந்தனர். தலைவர், 62 வயதான எட்வர்ட் ஸ்மித். வயது 62. அனுபவம் 45
ஆண்டுகள். வீர தீரத்துக்கும், தலைமைப் பண்புகளுக்கும் பல
பரிசுகள் வாங்கியவர். ஆனால் 1911 ம் ஆண்டு, ஒலிம்பிக் திநியூ
யார்க் துறைமுகத்தில் இன்னொரு கப்பலோடு மோதியபோது அதன் கேப்டனாக இருந்தவர் இதே
ஸ்மித். வயதாகிவிட்டதால் அவர் திறமை மழுங்கத் தொடங்கிவிட்டதோ என்று அபோதே
முணுமுணுப்புக்கள் கிளம்பின. இவற்றையும் மீறி, ஸ்மித்
டைட்டானிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
திதனது முதல் மற்றும் இறுதிப்
பயணத்தில் டைட்டானிக் சுமந்து சென்ற
உணவுப் பொருள்களின் பட்டியலிலிருந்து ஒரு சிறு பகுதி. இறைச்சி 34,020 கிலோ, மீன்4,910 கிலோ, முட்டைகள் 40,000, உருளைக் கிழங்கு 40,000 கிலோ, வெங்காயம் 1,600
கிலோ, ஆப்பிள் 36,000, ஆரஞ்சுப் பழங்கள் 36,000, பால் 5,678 லிட்டர்.
நன்றி!!!
Subash
Subash
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON