பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது.
தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத்
தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.
முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள். ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.
ஆண் குழந்தை ‘பெரிய பிள்ளை’ ஆவது எப்போது?
இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச்
சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும்
தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?
இல்லை!
ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென
ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல.
படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும்.
உடல் வளர்கிறது.
குரல் தடிப்படைகிறது.
மீசை அரும்புகிறது.
ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது.
9 முதல் 14 வயதுவரையான
காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது.
ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில்
பருவமடைகிறான்.
ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.
தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு
மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள்
இல்லை.
பையனின் சில சந்தேகங்கள்
உடல் வளர்ச்சி : பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம்
உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே
அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு. இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில்
பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.
அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட
உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம்
வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர். எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல்
மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.
தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.
விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி
அரும்புவது கண்டு,
“எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில்
குறைபாடு உள்ளதா” என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம். எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல்
இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.
உடற்பயிற்சிகள் உதவுமா?
எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில்
மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது
உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது
நல்லதல்ல.
சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண
பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.
பாலுணர்வு
தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை
உங்கள் கண்களில் படுகிறாள். உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள்
நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள். சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று
வைப்போம்.
உங்கள் உடல் சிலிர்க்கிறது.
முகத்தில் வியர்வை அரும்புகிறது.
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன.
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.
இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது. அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது. “ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு” இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது. ஆனால் பாலுணர்வு அல்ல. தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.
அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப்
பேசுவான்.
அவளது குணங்களை மெச்சுவான். ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.
காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு
வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.
அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம். விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான
உணர்வுதான். இதற்குக் காரணம் என்ன? உங்கள்
உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன.
அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன. இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.
வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.
முடி வளர்தல்
நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல்
முடியாகும்.
முகத்தில் மீசை தாடி அரும்பும், நெஞ்சில் வளரும். அக்குளுக்குள் தடிப்பாக வளரும்.
கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.
ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?
இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான். ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும். பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும். இதனால் உங்கள் விதைகள் வளரும். அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும்.
முடி வளரும். ஏனைய மாற்றங்களும் தொடரும். எனவே இவை யாவும் இயற்கை நியதிதான்.
சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம்.
அவ்வளவுதான்.
வியர்வை
“இவன்றை வேர்வை மணக்கிறது”
பல அம்மாக்கள் சொல்வார்கள். அவனது சேர்ட்டை துவைக்க எடுக்கும்போதுதான் சில அம்மாக்களுக்கு புரிய
ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள்
உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச்
செய்யும்.
வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது. ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு
ஆகியவையும் இருக்கும். வியர்வை உண்மையில் மணமற்றது. ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது. இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி
உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால்
உடனடியாகக் குளியுங்கள். இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன.
அவற்றை உபயோகிக்கலாம்.
விறைப்படைதல்
முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும்
இருக்கும்.
சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல. விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி
இறுக்குவதாகும். அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும்.
இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.
இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ
நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின்
அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.
தூக்கத்தில் விந்து வெளியேறல்
அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக்
காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் (Nocturnal
emisions) என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து Semen
எனப்படுகிறது.
இப்பொழுது உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக்
காரணம்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின்
கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும். ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில் அவளது கரு முட்டை
இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.
அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு
உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த
மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.
தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும்
சொல்வதுண்டு.
இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு
பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு. இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.
ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம். இது இயற்கையான செயற்பாடு.
பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு
ஏற்படுகிறது.
ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு
விளக்குவது அவசியம்.
தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம். ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும். தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும்
ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
About Author

Advertisement

Related Posts
- இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும்/ easy way to increase girls breast size10 Apr 20150
இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறத...Read more »
- பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்! / reason for quickly Puberty in young girls12 Apr 20150
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தா...Read more »
- உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்துக்களும் வெளியேறுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க...07 Mar 20170
இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள...Read more »
- ஏன் வேண்டும் உச்சகட்டம் ?07 Mar 20170
தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அ...Read more »
- பெண்கள் சுய இன்பம் காண்பது எப்படி? (ஆண்கள் படிக்க வேண்டாம்)07 Mar 20170
இந்த பதிவு வயதுக்கு வந்தவருக்கு மட்டும் ,Only 18+ பெண்கள் சுய இன்பம் காண்பது எப்...Read more »
- உடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்! Women reveal the most bizarre times theyve had an orgasm WITHOUT having Intercourse.01 Jun 20170
பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.