நதிகள், ஓடைகள்
போன்றவற்றின் பிறப்பிடம் காடுகள்தான். அவை தான் நீரின் ஆதாரம். ஆனால் ஆச்சரியமாக
நீருக்கு அடியிலும் காடுகள் இருக்கின்றன. நீர்காடுகளில் இரண்டு வகை உள்ளன.
முதல் வகையை அலையாத்தி
காடுகள் என்கிறார்கள். இது பெரும்பாலும் கடல்நீருக்கு அருகிலேயே வளரும். இந்த
தாவரங்கள், தண்டுகளிலும், கிளைகளிலும்
உள்ள துவாரங்களின் மூலம் ஆக்சிஜனை உள் இழுத்துக்கொள்ளும். நீர்மட்டம்
அதிகரிக்கும் போது, சிறிய குழல்களை
வெளியே நீட்டி சுவாசிக்கும். கடலுக்கு அருகில் இருந்தாலும், உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்ளும். இதன் இலைகள்
மூலமாக நீர் ஆவியாதல் மிக மெதுவாகவே நடக்கும்.
சுனாமி, கடல் கொந்தளிப்பு போன்ற காலங்களில் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி
இந்த அலையாத்தி காடுகள் நம்மை காப்பாற்றுகின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்திக்
காடுகள் பிரேசிலில் உள்ளன. இதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர
கிலோ மீட்டர். இரண்டாவது இடம் நமது பிச்சாவரம் கடற்கரை. கடந்த சில ஆண்டுகளாக
பிச்சாவரத்தில் அலையத்திக் காடுகளில் அடர்த்தி அதிகரித்து வருகிறது.
இரண்டாவது வகை காடுகள்
கெல்ப் காடுகள் என்கிறார்கள். இவை கடலுக்கு அடியில் வளரும் பூஞ்சை வகை செடிகள்.
செடிகள் என்றால், ஏதோ
நம்வீட்டில் வளர்க்கும் செடிகள் போன்று கிடையாது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் 20 முதல் 40 அடி உயரம் வரை
வளர்ந்து மிரட்டும். உலகில் இருக்கும் மிக முக்கியமான காடுகளின் பட்டியலில் இந்த
கெல்ப் காடுகளும் உண்டு.
கடலுக்கு அடியில் எந்த தப்பவெப்ப சூழலிலும் இவை வளரும். நீருக்கு
அடியில் கிடைக்கும் வெளிச்சம், நீரில்
கலந்திருக்கும் ஆக்சிஜன், பாறைகளில்
இருக்கும் தாதுக்களை உட்கொண்டு இவை வளருகின்றன. மெல்லிய நாணல் போல இருக்கும்
ஆயிரக்கணக்கான தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது போல இருக்கும் ஆயிரக்கணக்கான
தாவரங்கள் ஒன்று சேர்ந்து நிற்பது தான் இந்த கெல்ப் காட்டின் பலம்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON