Home
»
Nanjil Nadu
»
அரிய புகைப்படங்கள்
»
குமரி மாவட்டம்
»
நாஞ்சில் நாடு - Nanjil Nadu
» தமிழகத்தின் முதல் கலங்கரை விளக்கம்தான் நம் குமரிமாவட்ட முட்டம் கலங்கரை விளக்கம் .அதன் அரிய புகைப்படம் தான் இது
தமிழகத்தில் முதல் முதலில் ஆங்கிலேயர்
காலத்தில் 18ம் நூற்றாண்டில் கன்னியாகுமரி
மாவட்டம் முட்டம் என்ற இடத்தில் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு 1875ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு 1882ம் ஆண்டு
முதல் முட்டம் கலங்கரை விளக்கம் செயல்படத் துவங்கியது. தமிழ்நாட்டில் அமைந்த முதல்
கலங்கரை விளக்கம் என்ற பெருமை முட்டம் கலங்கரை விளக்கத்திற்கு உண்டு. அதன்பிறகு 1887ல் மஹாபலிபுரத்திலும், 1887ல் மணப்பாட்டிலும்
ஆங்கிலேயர்கள் அமைத்தனர். தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் மூன்று கலங்கரை விளக்கம் அமைத்தனர். அதன்
தொடர்ச்சியாகத்தான் அடுத்தடுத்து அமைத்தார்கள்.
முட்டம் கலங்கரை விளக்கம் செங்குத்தான
குன்றின் மேல் முட்டம் துறை மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது. நவம்பர் 1, 1956 அன்று மாநிலங்கள் மறு சீரமைப்பு அதை
தமிழ்நாடு மாற்றப்படும் போது வரை இப்பகுதியில் திருவாங்கூர் மாநிலத்தின் ஒரு
பகுதியாக இருந்தது. மீனவர் நலனுக்காக 1875ம் ஆண்டு ஒரு
பாய்மரக் கப்பல் பரக்க விட்டனர். அதில் இருந்து கிடைத்த ஒளியை வைத்து இந்தியாவின்
மேற்கு கடற்கரை பகுதியில் துறைமுகங்கள் இடையே தினித்து கொழும்பு கட்டுப்பாட்டை
எடுத்து பிரிட்டிஷ் காரர்கள் முட்டத்தில் கலங்கரை விளக்கம் அமைக்க திட்டமிடப்பட்டு
பர்மிங்காம் என்ற இடத்தில் சான்ஸ் பிரதர்ஸ் நிறுவனம், மேலே
உள்ள கொத்து கோபுரத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் சப்ளை செய்து 1882 முதல் செயல்படத் துவங்கியது.
படிப்படியாக நவம்பர் டிசம்பர், 1909 போது புதிய கோபுரம் மீது நிறுவப்பட்டது.
முறையாக 1910ம் ஆண்டு ஜனவரி 1ம்
தேதி முறையாக செயல்பட்டது. அன்று முதல் 1963 வரை
மின்சாரம் கண்டு பிடிப்பது வரை அதிக சக்தி கொண்ட பெட்டர்மாஸ் லைட்
பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மாற்றங்ளுக்கு பிறகு 1994ம்
ஆண்டு நவம்பர் 30ல் பி.வி.பர்னர் லைட் 12யு, 100 டபிள்யூ ஆல்சன் விளக்கை உலோக ஹாலைடு
விளக்காக மாற்றப்பட்டது. 1996 ஏப்ரல் 30ல் கணினி மயமாக்கப்பட்டது. 3-3-2006 அன்று
நவீன ரேகான் எனும் மற்றொரு கருவி பொருத்தப்பட்டது.
இந்த கருவி பகல் நேரத்தில் கப்பல்
ஓட்டி மாலுமிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இரு இரவு நேரங்களில் தீடீர் என்று
இரவு நேரத்தில் கலங்கரை விளக்கில் பழுது ஏற்பட்டால் மாறாக செயல்படும். பகல்
நேரத்தில் வெள்ளைத் துணியால் மூடிவைக்கப்படும், ஏனென்றால் பகல் நேரத்தில் சூரிய ஓளியால் லென்சு க்கு பாதிப்பு
ஏற்படாமல் இருக்க மூடி வைக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் நோய் எதிர்ப்பு
சத்திக்காக பச்சை துணியை பயன்படுத்துவது போல், இங்கு
வெள்ளை துணி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைத் துணி சூரிய வெளிச்சத்தை வெளியே
பிரதிபலிக்கிறது.
இந்த கலங்கரை விளக்கம் கடல்
மட்டத்தில் இருந்து 43 மீட்டர்
உயரத்தில் 20 மீட்டர் உயர அறுங்கோண கோபுரம் கருப்பு
வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது இன்றும். இதில் 700எம்
எம் ஆப்டிகல் லென்ஸ் பொருத்தப்பட்டு 12வி 400 டபில்யூ உலோக ஹாலைடு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதை இயக்குவதற்கு 12வி இரண்டு சிறிய மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. உள்ளே உள்ள
பொருட்களும் உபகரணங்களும் கடல் காற்றினால் பாதிக்காமல் இருக்க 12 விஷேச ஜன்னல்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுகாதாரமான காற்றை
மட்டுமே உள்ளே அனுமதிக்கும் இதனால் உள்ளே உள்ள உபகரணங்கள் பாதுகாக்கப்படுகிறது.
இந்த கலங்கரை விளக்கம் இயக்க 440 வோல்ட் 50 வாட்ஸ்
பவர்சப்ளை பயன்படுத்தப்படுகிறது. சுலபமாக சுழல்வதற்கு சுமார் 100 கிலோ பாதரசம் பயன்படுத்தப்பட்டு அதன் மேல் லென்ஸ்
பொருத்தப்பட்டுள்ளது. அதன் எடை 1அரை டன் சுழற்ச்சி
பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பாதரசம் ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளை மண்ணென்ணையால்
சுத்தம் செய்யப்படுகிறது, பாதரசத்தின் அளவு கூடினாலும்
குறைந்தாலும் சென்ஸ் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். மின்சாரம் இல்லாதபோது இது
சுழல்வதற்காக பயன்படுத்திய 20 கிலோ எடை கொண்ட கிளாக்
மிஷின் இன்றும் இந்த கலங்கரை விளக்கில் செயல்பாட்டில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
1993 ம் ஆண்டு முதல் கலங்கரை
விளக்கிற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் சுற்றுலா
பயணிகள் 2012ம் ஆண்டு செப்பம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில்
இந்தியாவில் முதன் முதலாக 13 கலங்கரை விளக்கங்கள் மட்டுமே
சுற்றுலா பயணிகள் பார்பதற்கு அனுமதிக்கப்பட்டது, இதில்
ராமேஷ்வரம், முட்டம், மாமல்லபுரம்
ஆகிய இடங்களில் அமைந்துள்ள கலங்கரை விளக்கமும் அடங்கும். இவைகளை பள்ளி கல்லூரி
மாணவர்கள் அறிந்தும் தெரிந்தும் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது.
நன்றி!!!
About Author

Advertisement

Related Posts
- மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் புனித பயணம் - Blessed Devasahayam Pillai Church Arvalvaimozhi04 May 20150
இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றா...Read more »
- குமரித் தந்தை மார்ஷல் நேசமணி வரலாறு - marshal A. nesamony History27 Aug 20170
தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்த...Read more »
- 1900 ஆம் ஆண்டு குற்றாலத்தில் எடுத்த அரிய புகைப்படம்...! In 1900 Kutalam Rare Photo16 Apr 20140
1900 ஆம் ஆண்டு குற்றாலத்தில் எடுத்த அரிய புகைப்படம்...! In 1900 Kutalam Rare Photo Thanks...Read more »
- பழனியின் அன்றைய தோற்றம் - Palani Very Old Picture16 Apr 20140
பழனியின் அன்றைய தோற்றம். Palani Very Old Picture Thanks Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.