கொடிவேரி
அணைக்கட்டு (Kodiveri Dam) இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது.
இந்த அணைக்கட்டு கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து சுமார் 15
கிலோமீட்டர் தொலைவில் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மைசூர்
மகாராஜா 17-வது நூற்றாண்டில் இந்த கொடிவேரி அணையைக்
கட்டினார். இது பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை
ஆகும்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பரிசல்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக கொடிவேரி அணை இருந்து வருகிறது.
இந்தப்
பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி
வருகிறது.பெரியார் மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம்(Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப்
படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது.
கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை(பவானி ஆறு காவேரியுடன்
சங்கமமாகும் கூடுதுறை) இருக்கிறது.
கொடிவேரியின்
மேல் அணையில் கொஞ்ச தூரம் வரை சிமெண்ட் தளம் போடப்பட்டிருக்கும், அதில் நின்று கொண்டு குளிக்கலாம். வெளியிலிருந்து
பார்க்கும்போது பயமுறுத்துவதாக இருக்கும், ஆனால் இறங்கினால்
இடுப்பளவு ஆழம் தான் இருக்கும். அதற்கு மீறும் தண்ணீர் அருவியாகிக் கொட்டிவிடும்.
தடுப்புச் சுவரின் உயரம் இருப்பதால் அதைப் பிடித்துக்கொண்டே அக்கரை வரை தண்ணீரில்
நடந்து செல்லலாம்.கீழே அருவியில் குளிப்பது சற்று அபாயம் நிறைந்தது. ஆழம் மிகக்
குறைவாகவே இருந்தாலும், வழுக்குப் பாறைகளும், சுழல்களும் நிறைந்த இடம் ஆகும்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பரிசல்களும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பூங்காக்கள் அமைக்கப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக கொடிவேரி அணை இருந்து வருகிறது.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON