Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மணத்தக்காளி, மிளகு தக்காளி, சுக்குட்டி கீரை, APPLE OF SODOM, BLACK NIGHTSHADE, POISON BERRY
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மூலிகையின் பெயர் –: மணத்தக்காளி . தாவரவியல் பெயர் –: SOLANUM NIGRUM தாவரவியல் குடும்பம் –: SOLANACEAE இதற்கு ஆங்கிலத்தில் ...
மூலிகையின் பெயர் –: மணத்தக்காளி.
தாவரவியல் பெயர் –: SOLANUM NIGRUM
தாவரவியல் குடும்பம் –: SOLANACEAE

இதற்கு ஆங்கிலத்தில் APPLE OF SODOM, BLACK NIGHTSHADE, POISON BERRY etc.

மணித்தக்காளி அல்லது மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.

மற்ற பெயர்கள்
இது மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி, சுக்குட்டி கீரை
மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும்.

மருத்துவப் பண்புகள்
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது உணவில் உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன.


மருத்துவப் பயன்
இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது

தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.
சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும்.
செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.
மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன.
இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது.
விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.
உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.
தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம்.
உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.
நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும்.
சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம்.
கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.
மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது.
இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும்.
வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.


இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.
மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.
பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது.
புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது.
பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது.
ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top