Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
செருப்பு வாங்கும் போது கவனம் தேவை. செருப்பை தேர்ந்தெடுக்கும் போது , அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள...
செருப்பு வாங்கும் போது கவனம் தேவை.

செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது.

விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும். தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும்.

தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும். மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும்.

வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

நன்றி!!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top