Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: சொர்க்க பூமி மாஞ்சோலை - சுற்றுலா,
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கொளுத்தும் அக்னி நட்சத்திர 104 டிகிரி வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வந்தால் முதலை மூச்சு விடுகிறார்கள் பொது மக்கள். காலை...

கொளுத்தும் அக்னி நட்சத்திர 104 டிகிரி வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் வந்தால் முதலை மூச்சு விடுகிறார்கள் பொது மக்கள். காலை முதல் மாலை வரை வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சித்திரையின் அக்னி நடசத்திர வெயிலின் தாக்கம் மக்களை நரக வேதனையில் தள்ளுகிறது.

இதிலிருந்து மீளுவதற்கு சிறிதளவு வெப்பம் தணிந்த குளிர்ச்சி கிடைத்தால் அதை சொர்க்கமாகவே கொண்டாடலாம்.

அந்த சொர்க்கத்தைத் தருகிறது நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ள மாஞ்சோலை எனும் சொர்க்க பூமியான கோடை வாஸஸ் ஸ்தலம்.


தரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கிறது மாஞ்சோலை அதற்கும் மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு. மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம்.

சாதாரணமாக அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் 50 டிகிரி அளவு வெயிலின் உஷ்ணமிருந்தாலும் குளிர்ச்சியாகவே காணப்படுவை இந்த மாஞ்சோலை, குதிரைவெட்டி ஊத்து நாலுமுக்கு எஸ்டேட்கள். குளிர் காலமான நவம்பர் டிசம்பரில் மைனஸ் டிகிரிக்கும் கீழே வெப்ப நிலை போவதால் உறைபனி கொட்டும்.

தற்போதைய கோடையில் விடியும் போதே உறைபனி மூட்டத்துடன் தான் இந்த மலைப் பிரதேசம் விடியும் தனியார் கம்பெனிகளின் தேயிலை தோட்டங்கள் இருப்பதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அங்கே குடியிருப்புகளுடன் கூடிய வேலையில் இருக்கிறார்கள் டூரிஸ்ட்கள் தங்குவதற்கென வனத்துறையின் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு.

மாசு படாத சூழல், சுத்தமான மலைக்காற்றின் பிராணவாயு கிடைப்பதால் நாங்கள் ஆரோக்யத்துடனிருக்கிறோம் என்கிறார்கள் இந்த மலை மக்கள். 4800 அடி உயரத்திலிருந்து வாட்ச் டவர் மூலம் பார்த்தால் 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தூத்துக்குடியின் அனல்மின் நிலையத்தைப் பார்க்கலாம் அந்த அளவுக்குத் தொலைப் பார்வை வசதி உண்டு. கோடையைத் தணிக்கும் குளிர். மூலிகை மணத்தை வெளிப்படுதும் சம்ய சஞ்சீவி மரங்கள். ரம்மியமான சூழலைக் கொண்ட குளிர்ச்சி. கோடை நெருப்பை விரட்டும் மலைப் பகுதி.


போலாமா... மாஞ்சோலைக்கு.

போகும் மார்க்கம்-:
நெல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலையிலுள்ள கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் மணிமுத்தாறு அதன் வழியாக 11 கிலோ மீட்டர் மலைப் பயணம் செய்தால் மாஞ்சோலை எஸ்டேட் இங்கே செல்ல வனத்துறையின் அனுமதி அவசியம் காலை முதல் மாலை வரை மட்டுமே அணுமதி.

நன்றி!!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top