அதனால் கருப்பைக்கு கருமுட்டைகள் செல்வது தடுக்கப்படும். ஆகவே சினைப்பை கருவுராது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சைக்கான வெட்டுக்கீறல், கருமுட்டை செல்லும் குழாய்களை வேகமாகவும் சுலபமாகவும் அடைத்தல் மற்றும் வேகமான நிவாரணம் என்று இந்த அறுவை சிகிச்சையில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளை நாம் ஒதுக்கி விடமுடியாது. குழந்தை பிறப்பை தடுக்க இந்த வழிமுறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதன் பக்க விளைவுகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கருமுட்டை செல்லும் குழாய் அடைக்கப்பட்டதால், கரு உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால் இந்த அறுவை சிகிச்சையினால் ஏற்படும் சில பக்க விளைவுகள், உங்கள் நிலைமையை மோசமடையச் செய்யலாம். ஆகவே அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் ரீதியாக பக்க விளைவுகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும். சீக்கிரமே மருத்துவரிடம் சென்று பிரச்சனையை கண்டுபிடித்தால் தான், விரைவில் அதற்கு ஒரு தீர்வும் கிடைக்கும். சரி, அப்படி என்ன தான் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பார்க்கலாமா.
இரத்தக் கசிவு
இரத்தக் கசிவு என்பது இந்த அறுவை சிகிச்சையினால் ஏற்படும் மற்றொரு முக்கியமான சிக்கலாகும். அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக ஏற்படும் துளைகளினால் இரத்தக் கசிவு ஏற்படும். ஆகவே அறுவை சிகிச்சை முடிந்த பின் கொடுக்கப்படும் கவனமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது அவர்களை வேகமாக குணமடையச் செய்யும். அதனால் இரத்தக் கசிவு போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
சுவாச கோளாறுகள்
இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்துகளே. எனவே ஏற்கனவே அலர்ஜி ஏற்படும் என்றால், அதனை அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே மருத்துவரிடம் சொல்லி விடுவது நல்லது.
தொற்றுகள்
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் போது முக்கியமான மற்றொரு பக்க விளைவாக விளங்குகிறது தொற்றுகள். அறுவை சிகிச்சைக்கு பின், உங்களுக்கு காய்ச்சல் அல்லது வயிற்று வலி ஏற்பட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் கூறிவிடுங்கள். பிரச்சனை என்னவென்று விரைவாக கண்டுபிடித்தால் தான் விரைவாக குணமடைய முடியும்.
முக்கிய குழாய்கள் துளையிடப்படும்
அறுவை சிகிச்சையின் போது சில முக்கிய குழாய்கள் துளையிடப்படலாம். அறுவை சிகிச்சை நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள குழாய்கள் துளையிடப்படுவதால் அவைகள் பாதிக்கப்படும். இதனால் அதிகளவில் இரத்தப் போக்கும், சீழ்ப்பிடிப்பும் ஏற்படும்.
வயிற்று வலி
இந்த அறுவை சிகிச்சைக்கும், வயிற்று வலிக்கும் நேரடியான தொடர்பு இல்லை. ஆனால் அறுவை சிகிச்சையினால் உண்டாகும் தொற்றுகளால், இந்த வயிற்று வலி உண்டாகலாம். பொதுவாக வயிற்றின் கீழ் பகுதியில் தான் வலி உண்டாகும்.
கருமுட்டைச் செல்லும் குழாய் துளையிடப்படும்
அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக கருமுட்டைச் செல்லும் குழாய் துளையிடப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் முக்கியமான பக்க விளைவான இரத்தப்போக்கு ஏற்படும். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் அல்லது வயிற்று வலி வந்தால், உடனே மருத்துவரிடம் கூறுங்கள்.
இடம்மாறிய கர்ப்பம்
குழலெடுப்பிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பது என்பது மிகவும் அபூர்வம். ஆனால் அப்படி நடந்து விட்டால், அது இடம்மாறிய கர்ப்பமாக உருவாகும். சரியான நேரத்தில் கவனிக்கவில்லை என்றால் இடம்மாறிய கர்ப்பம் என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் ஒன்றாக மாறிவிடும்
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.