‘கர்ப்ப
காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று
இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்களெனவும்
கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின்
முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச்
செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு
ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன்
எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச்
மாதம் வரும். ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு
சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது
சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒர வாரம் முன்னரோ அல்லது பின்னரோ
பிரசவிப்பார்கள்.
கர்ப்பப்பையில் குழந்தையின் நிலை
கர்ப்பப்பையில்
குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை
வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும்,
கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள்
வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து
தொடைகளின் மீதும் இருக்கும்.
பிரசவிக்கும்
நிலை
பிரசவம்
ஏற்படும்போது குழந்தை இருக்கும் நிலையைத்தான் ‘பிரசவிக்கும்
நிலை’ என்போம். சாதாரணமாக அதிகபட்சப் பிரசவத்தில்
தலைப்பகுதிதான் முதலில் பிரசவமாகும். இது 96 சதவீத
கர்ப்பிணித் தாய்மார்களிடையே நிகழக் கூடியதாம். சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில்
புட்டம் முதலில் பிரசவிக்கம். ஒரு சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் முதலில்
கைகளோ, கால்களோ பிரசவிக்கலாம்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON