Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மிரட்டும் டெங்கு பல நோய்களை விரட்டும் நிலவேம்பு கசாயம் | nilavembu kudineer tamil |Green chiretta
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
நிலவேம்பு கஷாயம் செய்வது எப்படி ? அதன் பலன்கள் என்ன ? நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொ...

நிலவேம்பு கஷாயம் செய்வது எப்படி?அதன் பலன்கள் என்ன?
நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நிலவேம்பு முழுவதும் மருத்துவப்பயன் கொண்டது. கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண்டாகும், மலமிளக்கும், தாதுக்களைப் பலப்படுத்தும்.


நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச்சலைக் குறைக்கும், பசியை உண்டாக்கும். விட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாட்கள் சாப்பிட்டால் பலன் தெரியும். தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த சுண்டைக்காய் அளவு நிலவேம்பு இலை பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும். நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் கொடுக்கக்கூடாது. அதேபோல் காய்ச்சல் வந்து தொடர் வாந்தி, வயிற்றுவலியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு இந்த கசாயம் கொடுக்கக்கூடாது. முன்னெச்சரிக்கை - வீட்டில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் வந்தால், அவருடன் சேர்த்து வீட்டில் உள்ள மற்றவர்களும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். காய்ச்சல் வந்த நாளே நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது. எல்லா ஆலோசனைகளையும் மருத்துவரின் பரிந்துரைப்படி செய்வது நல்லது.
  

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top