Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! - health benefits drinking red wine
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பல வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரெஞ்சுக்காரர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளதாகவும் , அதனால் இதய நோயின் தாக்கம் கு...
பல வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரெஞ்சுக்காரர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளதாகவும், அதனால் இதய நோயின் தாக்கம் குறைந்திருப்பதாகவும் தெரிய வந்தது. இதற்கு காரணம் அவர்களின் உணவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பது தான். மேலும் பல ஆய்வுகளும், பிரெஞ்சுக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது டயட்டில் ரெட் ஒயின் இருப்பதாகவும் சொல்கிறது. மேலும் ரெட் ஒயினில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அப்படி ஆரோக்கியத்தை தரும் ரெட் ஒயினை நாம் ஏன் சேர்க்கக்கூடாது? உங்களுக்கு ரெட் ஒயினில் மறைந்திருக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

பற்கள் சொத்தையாவதைத் தடுக்கும் முத்துப் போன்ற பற்கள் வேண்டுமெனில், ரெட் ஒயினைக் குடியுங்கள். ஏனெனில் ரெட் ஒயின் பற்களின் எனாமலை இறுக்கமடையச் செய்து, இதனால் பற்கள் சொத்தை அடைவதைத் தடுப்பதோடு, பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கும். மேலும் ரெட் ஒயினில் பாலிஃபீனால்கள் இருப்பதால், இது ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கும். 

தூக்கமின்மை அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளுவால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பதை தவிர்த்து, சிறிது ரெட் ஒயின் குடியுங்கள். ஏனெனில் ரெட் ஒயினில் உள்ள மெலடோனின், நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். முக்கியமாக தூக்கமின்மை பிரச்சனையால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டால், மருத்துவரை அணுகுங்கள்.

இதயத்தை பாதுகாக்கும் தமனிகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் ரெஸ்வரேட்ரால். ரெட் ஒயினில் இதய நோக்கு எதிராகப் போராடும் ப்ளேவோனாய்டுகள் மற்றும் சபோனின்கள் உள்ளது. அதற்காக ரெட் ஒயினை அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இதனை அளவாக குடித்து வந்தால், உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.

மூக்கடைப்பைத் தடுக்கும் உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு மற்றும் சளி பிரச்சனை ஏற்படுகிறதா? அப்படியெனில் தினமும் சிறிது ரெட் ஒயின் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் அமெரிக்கன் ஜெர்னல் ஆஃப் எபிடெமியோலஜி, அன்றாடம் ரெட் ஒயின் குடித்து வந்தவர்களுக்கு 44 சதவீதம் சளி பிடிப்பது குறைந்ததாக சொல்கிறது.

ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் ரெட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இது டைப் 2 நீரிழிவு ஏற்படுவதைத் தடுப்பதோடு, எலும்புகள் வலிமையடையும்.

புற்றுநோய் பெண்கள் ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால், அது மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். மேலும் ரெட் ஒயினில் க்யூயர்சிடின் இருப்பதால், அது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும்.

வாழ்நாள் அதிகமாகும் ஆராய்ச்சியாளர்வள் ரெட் ஒயின் குடிப்பதால், வாழ்நாள் அதிகமாகும் என்று நம்புகின்றனர். மேலும் இது ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே இதனை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் நிறைய நன்மைகளைப் பெறலாம்.


05 Feb 2015

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...