Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கொடும்பாளூர் மூவர் கோவில்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கொடும்பாளூர் - சரித்திர நாவல்களை புரட்டின விரல்களுக்கு பழக்கப்பட்ட பெயர் தான் இது. இருகவேள் சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடம்....

கொடும்பாளூர் - சரித்திர நாவல்களை புரட்டின விரல்களுக்கு பழக்கப்பட்ட பெயர் தான் இது. இருகவேள் சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடம். ராஜா ராஜன் மனைவி வானதியின் ஊர். இது நாம் படித்த தகவல் ,,, இன்றைக்கு கொடும்பளுரில் என்ன இருக்கிறது ? இது மூவர் கோவில் . இந்த ஊரில் இன்னும் கொஞ்சம் முழுமையாக உள்ள கோவில் இது . ஒரு பரந்த வயல வெளியின் நடுவே கம்பி வேலியிட்டு நடுவே நிற்கிறது. இதன் கோபுர அமைப்பு பெரிய கோவில் , கங்கை கொண்ட சோழபுரம் சாயலில் உள்ளது. இந்த கோவில் மாற்ற இரண்டை விடவும் பழையது. இது மூவர் கோவில் என்று சொல்லப்பட்டு உள்ளது , இதன் உண்மை பெயர் இல்லை, இதன் அருகில் ஐந்து சன்னதி உள்ள கோவில் , ஐவர் கோவில் என்று அழைக்கபடுகிறது . அதனால் மூன்று சன்னதிகள் உள்ள கோவில் , மூவர் கோவில் என்று அழைக்கபடுகிறது . இது சென்னை - மதுரை நெடுஞ்சாலையில் , விராலிமலை மார்கமாக அணுகும் விதம் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டையில் இருந்தும் அணுகலாம் . இங்கு இருந்து ஐவர் கோவிலுக்கும் செல்லலாம்.
 

நன்றி !!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top