Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: 1300 வருட பல்லவர் ஓவியம் - தமிழன் கைவணம்!!!
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற...
லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது.

இன்றளவும், இந்த ஓவியத்தை ஆஹா...ஓஹோ... இதை போல் ஒரு ஓவியம் வரையப்படவில்லை. இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார். மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது. இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது. மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது. மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது. மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது. என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே, பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது ! இதை வரைந்தவன், அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை ! ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்பது தெரியுமா?

கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும் !! இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன் !!! இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம், அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது !? கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம், அடடா... விவரிக்க வார்த்தை இல்லையே... எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

நன்றி !!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top