Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: டச்சுப் படை வென்ற முதல் தமிழன் மாவீரன் அனந்த பத்மனாபன் நாடார் - Nadar Tamil hero Ananta patmanapan
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
                        மாவீரன் அனந்த பத்மனாபன் நாடார் சேரத்தமிழ் நாட்டில் தென் திருவிதாங்கூரில் கல்குளம் வட்டம் வியன்னூர் கிராமம் க...
                        மாவீரன் அனந்த பத்மனாபன் நாடார்


சேரத்தமிழ் நாட்டில் தென் திருவிதாங்கூரில் கல்குளம் வட்டம் வியன்னூர் கிராமம் கண்ணனூர் தேசம் தச்சன்விளை என்னும் ஊரில் பள்ளிமேடை என்னும் பெயர் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தவர் ஆசான் தாணுமாலைய நாடார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளவாயாகவும், போர்ப்பயிற்சி அளிக்கும் கல்விக் கூடமான களரிகள் நூற்றி எட்டுக்கும் ஆயுதக் கிட்டங்கிகளுக்கும் பொறுப்பாளராகவும் திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். வர்மக்கலை ஆசானாகவும் விளங்கிய அவருக்கு 1698ஆம் ஆண்டு ஆவணி 23 அன்று ஆண் மகவு பிறந்தது.அனந்தபத்மநாபன் எனும் பெயரினரான அவனும் இளமையிலேயே போர்ப்பயிற்சி ஆசிரியராகவும் வர்மக்கலை ஆசானாகவும் இருந்தான்.


தந்தை தாணுமால்ஐயநாடார் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். தந்தையின் அரண்மனைப் பொறுப்புகள் அனைத்தும் அனந்த பத்மநாடாரின் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டன. பாண்டிய மன்னர்களும், சாளுக்கிய சோழர்களும் பலநூறு ஆண்டுகளாக சேரத்தமிழ் நாட்டின் மீது படையெடுத்து, மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.1672ஆம் ஆண்டு ஆதித்ய வர்மாவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் திருவிதாங்கூரையும் கோவில்களையும் மொகலாயப் படைகள் தாக்கின. ஆதித்யவர்மா கொல்லப்படவே 1721ல் ராமவர்மா அரியணையில் ஏறினார். 1706ல் பிறந்த மார்த்தாண்ட வர்மா சிறுவயது முதலே திருப்பாப்பூர் அரண்மலையிலிருந்தபடி ஆட்சியைக் கவனித்து வந்தார். 1728ல் மன்னர் ராமவர்மா காலமானதும் மருமக்கள் தாயவழியில் இளவரசர் மார்த்தாண்ட வர்மா முடிசூட்டப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரைக் கொல்லவும் சதிகள் திட்டமிடப்பட்டதால், அனந்தபத்மநாபனின் களரிகளில் இளவரசர் ஒளிந்து மறைந்து வாழ்ந்தார். அங்கேயே போர்ப்பயிற்சிகளும் பெற்றுத் தீரனானார். நாயர்களின் சதிச் செயல்கள் மற்றும் பலவித இடர்ப்பாடுகளாலும் அலைக்கழிக்கப்பட்டு அனைத்தையும் அனந்தபத்மநாடார் துணையுடன் வென்ற மார்த்தாண்டவர்மா 1729ல் திருவாங்கூர் மன்னரானார்


பின்னரும் பல சமுதாயச் சதிகளுக்க ஆட்பட்டு, அளவில்லாத இடையூறுகளுக்கு உள்ளானார். அத்தனைக்கும் தன்னுடனேயே இருந்து ஊண் உறக்கமின்றி, இராப்பகல் கண் துஞ்சாது வீரத்துடன் செயலாற்றி உதவிகரமாக இருந்தார் அனந்தபத்மநாடார். கி.பி.1741ல் நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர்களை தனது 108 நாடார் சிலம்பங்களின் ஆசான்மார்களையும் மீனவ சமுதாய மக்களையும் ஒருங்கினைத்து போரிட்டு டச்சுப்படைத் தளபதி டிலனாயைக் கைது செய்தார். இதுவே இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டமாகும். டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்து பின்னர் தனது படைதளபதியாக நியமித்து கொண்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.

1750ஆம் ஆண்டு ஆவணி 28அம் நாள் மயக்க மருந்து கலந்த விருந்து அளிக்கப்பட்டதால் மயக்கமானார் அனந்தபத்மநாபன். சதிகாரர்கள் வெட்டிக் கொல்ல முயன்றும் தப்பித்துக் குதிரையில் படுத்தபடியே சொந்த ஊருக்குச் சென்றார். வீட்டுவாசல் வரை சென்ற அவரின் உடல் அப்போது சரிந்த வீழ்ந்தது. பின்னர் நய வஞ்சகற்களின் நயவஞ்சகத்தினால் கி பி 1750 ஆண்டு மாவீரன் வீர மரணம் அடைந்தார். இதற்கு சான்றாக மாவீரனின் புகைப்படம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ளது.இவரது சமாதி தச்சன் விளையில் உள்ளது. அவர் மறைந்தாலும் அவரது புகழ் மேலோங்கி காணப்பட்டது.


பிற்காலத்தில் அவரது புகழை கண்டு பொறமை கொண்ட நய வஞ்சகர்கள் அவரது சரித்திரத்தை மறைக்க நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது மாவீரனின் புகழ் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கின்றது.இதனை பறை சாற்றும் விதமாக அவரது நினைவுநாள் செப் 13 யை வீர வணக்கநாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.தற்பொழுது மாவீரனுக்கு மணிமண்டபம் தச்சன் விளையில் கட்டவேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது . 



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

  1. ஒரு சந்தேகம்..
    சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயரை எதிர்த்து தானே நடந்தது...
    இது டச்சுப்படைக்கு எதிரானப் போர்...
    இது எப்படி சுதந்திரப்போராட்டமாகும்??

    ReplyDelete
  2. FRENCH padaikalai yethirthu poritathu thangal yentha pori serpieer

    ReplyDelete

CLICK TO SELECT EMOTICON

 
Top