இதுதான் தளபதி ”டி லனாய்” கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும். வெளியே தமிழ் மற்றும் இலத்தீன்
வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் (நாஞ்சில் நாடு)
தமிழ்நாட்டோடு இணைவதற்கு முன்பு வரை திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டில்
இருந்து வந்தது. எனவே இந்த மாவட்டத்தை சுற்றி ஏராளமான கோட்டைகளை காண முடிகிறது.
நாகர்கோவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலைக்கு அருகில்
அமைந்துள்ளது உதயகிரி கோட்டை. 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச்
சுற்றிலும் 16 அடி
உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக
சுவாரஸ்யமானது.
போறவழியெல்லாம் மூங்கில் காடுகள் மற்றும்
அடர்ந்த மரங்கள்
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
கீழ் இருந்த காலம். திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்து
கொண்டிருந்தார். மார்த்தாண்ட வர்மாவிற்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் பகை
தலைதூக்கியிருந்த நேரம். குளச்சல் கோட்டை டச்சுக்காரர்களின் கீழ் இருந்தது. அங்கு
ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தனர். போதிய இடமும், உணவும் இல்லாததால் தொற்று வியாதிகள் மூலம் பலர்
இறந்தனர்.
இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு குளச்சலில்
இருந்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மார்த்தாண்ட வர்மா திட்டமிட்டார்.
இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. டச்சு வீரர்கள்
மார்த்தாண்ட வர்மாவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உதயகிரிக் கோட்டையில் சிறை
வைக்கப்பட்டனர்.
இக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள 16
அடி உயர கருங்கல் கோட்டைகள்
அவர்களில் ஒருவர் தான் டச்சுத் தளபதி
யுஸ்டேஷியஸ் டிலனாய். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் ஐந்து ஆண்டுகளுக்கு
பிறகு டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்ட வர்மா ஒப்புக்கொண்டார். ஆனால்
டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்தார். அப்போது
அவருக்கு வயது 26. கி.பி. 1600 ஆண்டு இந்த கோட்டைகட்டப்பட்டதாகவும், பின்னர்
பேரரசர் ராஜராஜ சோழன்படையெடுப்பால் பாதிக்கோட்டை அழிந்துபோனதாகவும், வரலாறுகள்
கூறுகின்றன. வேநாடு மன்னர் மார்த்தாண்டவர்மா 1729 ம் ஆண்டுஇந்தக் கோட்டையை புதுப்பித்துக்
கட்டியுள்ளார்.
மன்னர் முன்பு டச்சு தளபதி டிலனாய் சரணடைவது குறித்த
ஓவியசிற்பம்
90ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த
கோட்டையைமுன்னின்று கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக்
கோட்டைக்குள் 200
அடி உயரமலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது.முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட
இந்தக் கோட்டைதில்லாணைக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.இந்தக்
கோட்டைக்குள் துப்பாக்கி வார்ப்படம் செய்யும்உலை ஒன்று உள்ளது. மன்னர்
காலத்தில் இங்குதுப்பாக்கிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்தக்கோட்டையை பல
ஆண்டுகள் முன்னின்று கட்டியதளபதி டி லனோய். தனது வாழ்நாளின்பெரும்பகுதியைஇந்தக்
கோட்டையில் தான் கழித்துள்ளார்.
வாளும், ஈட்டியும் தான் போர் என்று நினைத்தவர்களுக்கு
டிரில் பயிற்சி அளித்ததோடு துப்பாக்கி, பீரங்கி இயக்கவும் கற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அவரை படைத்தளபதியாக்கினார். தொடர்ந்து 35 வருடங்கள்
மார்த்தாண்ட வர்மா படையில் பணியாற்றிய டிலனாய் 1777 ல் காலமானார்.
டிலனாய் அவரது மனைவி மர்கெரெட்டா, அவருடைய
மகன் ஜான் டிலனாய் அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரது கல்லறை
அவருடைய உடல் உதயகிரிக்கோட்டையில் அடக்கம்
செய்யப்பட்டது. அருகில் அவருடைய மனைவி, மகனுடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று கல்லறைகளும் தேவாலய வடிவில் எழுப்பப்பட்டுள்ளது.
கோட்டையினைச் சுற்றிவரும்போது, ஒரு
அமைதியானசூழல் இருப்பதை காணலாம். விசித்தரமான தனிமைஉணர்வு ஏற்படுவதையும் தவிர்க்க
முடியாது.கோட்டையினுள் பெரிய அரண்மனையோ, கோவிலோஇல்லை.
நாம பார்க்கிற இந்த பகுதி தளபதி டி லனோய் (1729-1758) காலத்தில்
பீரங்கி குண்டுகள் மற்றும்
துப்பாக்கிகள் செய்யும் உலைகளத்தின் சிதைந்த பகுதிகள்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அளப்பரிய
பணிகளைமன்னர் மார்த்தாண்டவர்மாவும், தளபதி டி லனோயும்திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கோட்டைஉருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதிஉருவானது. மன்னரால்
பொன்மனை அணையும்,கால்வாயும் உருவாக்கப்பட்டதால், விளை நிலங்கள்செழித்து கன்னியாகுமரியை
வளமாக்கின.
புலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டை மூலிகை
பண்ணையின் நுழைவு வாயில்
இந்தக் கோட்டை ஒரு காலத்தில், கைதிகளை
காவலில்வைத்திருக்கும், களமாகவும் விளங்கியுள்ளது.திப்புசுல்தானுக்கு
எதிராக கிழக்கிந்திய கம்பெனிபோரிட்டபோது பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்தியகம்பெனி
இங்கு பாதுகாப்பாக வைத்திருந்ததாககூறப்படுகிறது. அண்மையில் தொல்பொருள் ஆய்வுத்
துறையினர்கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினைகண்டுபிடித்துள்ளனர். அந்தப்
பாதை கோட்டையிலிருந்துபத்மநாபபுரம் அரண்மனைக்கு ரகசியமாக செல்லும்வகையில்
அமைந்துள்ளது.
உதயகிரி முற்காலத்தில் ராணுவ கேந்திரமாகவே
இருந்திருக்கிறது. நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக் கொண்டபோது அதை
தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதி கோட்டையாக
தெரிவுசெய்யப்படக் காரணமே இதற்குள் உள்ள பெரிய குன்றுதான். இதற்குள் பெரிய கோயிலோ
அரண்மனையோ இல்லை. டிலனாய் மர்மங்களால் சூழப்பட்ட சரித்திர புருஷர். மன்னரின்
விசுவாசமான நண்பராக இருந்தவர். படைகளுக்கு நெருக்கமானவர். ஆனால் அவருக்கும் தளவாய்
ராமய்யனுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. டிலனாய் இறந்ததுமே அவரது இடம்
வரலாற்றில் குறுக்கப்பட்டது.
டிலனாய் அவரது மனைவி மர்கெரெட்டா, அவருடைய
மகன் ஜான் டிலனாய் அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர்
ப்ளோரிக் ஆகியோரது கல்லறை
பழைய ஒரு மாதாகோவில் போன்ற அமைப்பு இடிந்து
கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது. அதற்குள்தான் டிலனாய் அவரது தம்பி
ஆகியோரின் சமாதிகள் உள்ளன. பிற்பாடு அது ஒரு முக்கியமான சமாதியிடமாக ஆகி திருவிதாங்கூரில்
ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ரெசிடெண்ட் ஆட்சியைச்சேர்ந்த
சில அதிகாரிகளின் சமாதிகளும் அங்கே உள்ளன. அவர்கள் யார் என்பது பற்றி ஒன்றும்
தெரியவில்லை.
‘அனாதைமாதிரி கிடக்கிறார் ‘என்றேன்.
‘இந்த
மண்ணுக்கு டிலனாயின் கொடை வேறு எவரது கொடையைவிடவும் சிறியது அல்ல. இங்கே வலுவான
மைய ஆட்சியை, சட்டம்
ஒழுங்கை அவர் நிலைநாட்டவில்லை என்றால் இந்தியாவின் வளம்மிக்க மாவட்டங்களில் ஒன்றாக
கன்யாகுமரி ஆகியிருக்காது. கோட்டைகள்சூழ அமைதி உருவான பிறகுதான் பொன்மனை அணையும்
கால்வாயும் உருவாக்கப்பட்டன. நாஞ்சில்நாட்டு விளைநிலங்கள் உருவாயின. ஆனால் வரலாறு
அப்படியே அவரை மறந்துவிட்டது. ஒரு சாலைக்காவது நாம் அவரது பேரைபோடவேண்டும்’
கோட்டை தற்போது தமிழக வனத்துறையின்கட்டுப்பாட்டில்
உள்ளது கண்டு கொள்ளப்படாமல் இருந்த உதயகிரிக்கோட்டை இப்போது புதுப்பிக்கப்பட்டு
மான்பூங்கா, மயில்பூங்கா, விருந்தினர்
விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON