நீரிழிவு விழித்திரை நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள ஆண், பெண் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித் திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ என்கிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக விழித்திரை வீங்கி, அதில் ரத்தமும், நீர்க்கசிவும் ஏற்படுகிறது. இந்தக் கசிவு,
விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை குறையும். படிப்பதிலும், மிகச்சிறிய பொருள்களைப் பார்ப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதன் நடுப்பகுதி மங்கலாகத் தெரியலாம். நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்பட்டால், கண்களுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதில் நீரிழிவு விழித்திரை நோய் இருப்பது உறுதியானால், உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். கண்களின் வெளிப்புறத் தோற்றம், பார்வைத் திறன், கண்ணீர் அழுத்தம், பார்வைக் குறைபாடு, நிறக் குறைபாடு போன்றவற்றுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தவிர விழித்திரையில் ரத்தக் கசிவோ, நீர்க்கசிவோ இருக்கிறதா என்றும், விழித்திரையில் வீக்கம் உள்ளதா என்றும், பார்வை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறதா என்றும், ரத்தக் குழாயில் ஏதாவது மாற்றங்கள் உள்ளனவா என்றும் சோதிக்கப்படும். தேவைப்பட்டால், விழித்திரையின் ரத்த நாளங்களுக்குச் செய்யப்படுகிற ஆஞ்சியோவை ( யீறீuஷீக்ஷீமீsநீமீவீஸீ ணீஸீரீவீஷீரீக்ஷீணீஜீலீஹ்) மருத்துவர் பரிந்துரைப்பார். இதில் ஃப்ளோரோசின் என்கிற ஒருவித டை, கை நரம்பு வழியே ஊசி மூலமாக ஏற்றப்படும். அது விழித்திரை பகுதிக்குள் போய், கசிவும் அடைப்பும் உள்ள இடத்தைத் துல்லியமாகக் காட்டும்.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் ரத்த சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு போன்றவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம். பாதிப்பின் அளவைப் பொறுத்து லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். நவீன சிகிச்சைகளான விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ அறுவை சிகிச்சையும் உதவும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.