Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஏழு என்ற எண்ணுக்கு இத்தனை மகத்துவமா? | How great is the number seven?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும் . ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும் . காலத்தைக...
How great is the number seven?
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '' என்று குறிக்கபடுகிறது.

புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007. இந்தியாவின் அதியங்களும் ஏழுதான். 1.மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2.குஜராத்தின் தோலவிரா பகுதி 3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை 4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ 5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம் 6.டெல்லியின் செங்கோட்டை 7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்
எழு குன்றுகளின் நகரம் ரோம்
வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
மொத்தம் ஏழு பிறவி
ஏழு சொர்க்கம்(குரான்)
ஏழு கடல்கள் :'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்'- ஒளவை
வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
ஏழு வானங்கள். (Qur'an)
ஏழு முனிவர்கள் (Rishi)
ஏழு ஸ்வரங்கள் (,ரி,,,,,நி)
ஏழு கண்டங்கள் (ஆசியா, ஆப்பிரிக்கா, .தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, .ஐரோப்பா, .ஆஸ்திரேலியா, .அண்டார்டிகா)
ஆதி மனிதன் ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு
ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (சூரியன், சந்திரன், மெர்குரி, செவ்வாய், ஜூபிடர், வீனஸ் மற்றும் சனி)
திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
மேலுலகம் ஏழு 
கீழுலகம் ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
மொத்தம் ஏழு தாதுக்கள்
ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
ஏழு புண்ணிய நதிகள்
இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
அகப்பொருள் திணைகள் ஏழு
புறப்பொருள் திணைகள் ஏழு
சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
கடை ஏழு வள்ளல்கள்
சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
"திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
Subash

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top