தாலாட்டு பாடல்களில் குழந்தையின் மேனியை தாய் வர்ணிக்கும் காட்சி இது. தொட்டால் கனியும் பழங்களைப் போன்று மிருதுவானதும், விலைமதிப்பில்லாத ரத்தினங்களைப் போன்றதுமான உடலைப் பற்றி குழந்தைகளுக்குத் தெளிவாகக் கற்றுத் தருவோமா!
குழந்தைகளின் பிரைவேட் பகுதிகள் அவர்களுக்கானது மட்டும் என்று பள்ளி செல்லும் முன்பே சொல்லித்தர வேண்டும். உங்களோடு எப்போது அவர்கள் பேசத் தொடங்குகிறார்களோ அப்போதே அறிமுகப்படுத்துங்கள். முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கலவரப்படுத்தாமல், பயமுறுத்தாமல் அறிமுகம் செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
‘பாப்பாவை அம்மா மட்டும்தான் குளிக்க வைப்பேனாம்... இல்லைன்னா பாட்டி (அல்லது யார் செய்வார்களோ அவர்கள்)... இந்த இடமெல்லாம் அம்மா தேய்ப்பேனாம்... இதெல்லாம் நீ தேய்ச்சுக்கணுமாம்’ என்று விளையாட்டுப் போக்கிலேயே சொல்லிக் கொடுங்கள். சிறுவயதில் சொல்வது மனதில் நன்றாக பதியும். அதே நேரம் எவ்வளவு கவனமாக பிறப்புறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவது எப்பருவத்துக்கும் உதவும்.
முக்கியமான ‘சேஃப்டி ரூல்ஸ் & செல்ஃப் கேர்’ பற்றி கொஞ்சம் விவாதிக்கலாம். சேஃப்டி ரூல்ஸ் என்பது குழந்தைகளின் உடல் பற்றிய பாதுகாப்பு விதிகள். முக்கியமான 3 விதிகளை 3ம் வயதிலேயே தொடங்க வேண்டும்.
2. உன் உடல் உன்னுடையதே... நீ மட்டுமே அதற்கு பாஸ்...
குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தம். யார், எங்கு, எப்போது தொடலாம் என்பதை குழந்தையே தீர்மானிக்க வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அம்மா, அப்பாகூட தொட அனுமதிப்பதில்லை. நாமும் அதை கடைப்பிடிக்கலாம். சில குழந்தைகள் தொட்டுப் பேசுவதையே விரும்ப மாட்டார்கள். ஆனாலும், அடுத்தவர்கள் தொடும்போது சொல்லத் தயங்குவார்கள். அந்த தயக்கத்தை களைவதே ‘உடலுக்கு நீதான் பாஸ்’ என்கிற புரிய வைத்தல். குழந்தை விரும்பவில்லை என்றால், அது யாராக இருந்தாலும் தொட உரிமை இல்லை. குழந்தை விரும்பாததை உடனே சொல்ல வைக்க பழக்கப்படுத்துதல் பெற்றோர் கடமையே. ‘பாரு செல்லம்... உனக்கு அந்த ஆன்ட்டி தொட்டுப் பேசறது பிடிக்கலைன்னா நீ தாராளமா சொல்லலாம்... சொல்லாம கஷ்டப்படாதே’ என அவர்களுக்குத் தைரியம் அளித்தல் அவசியம். குறைந்தபட்சம் அங்கிருந்து விலகி விட வேண்டும் என்றாவது புரிய வைக்க வேண்டும்.
எல்லா நேரமும் ‘யெஸ்’ சொல்ல வேண்டியதில்லை... குழந்தைகளுக்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக்கொடுக்க வேண்டும். பிடிக்காத ஒன்றை தொடர்ந்து ஒரு குழந்தை அனுபவிக்கும் போது மனரீதியாகப் பாதிப்பும் பதற்றமும் ஏற்படும். அது மற்ற வேலைகளை வெகுவாகப் பாதிக்கும்... கவனக்குறைவை உண்டாக்கும். தொடுதல் அல்லது யாரேனும் எதையேனும் கொடுக்கும் போது விருப்பம் இல்லாவிட்டால் தயவுதாட்சண்யம் இன்றி ‘நோ’ சொல்ல பழக்குங்கள். அடுத்தவர்களுக்காக உங்கள் குழந்தை அவஸ்தைப்பட வேண்டுமா? ‘நோ’ என்பது ‘யெஸ்’ சொல்வதைக் காட்டிலும் எளிதே!
3. தொடுதல் பற்றிய விழிப்புணர்வு...
குழந்தைகளுக்குத் தொடுதல் பற்றி அறிவுறுத்த வயது வரம்பு கிடையாது. நீங்கள் கூறுவதை உங்கள் குழந்தை எப்போது புரிந்து கொள்கிறதோ அதுவே சரியான வயது.
தொடுதலில் 3 வகை உண்டு... பாதுகாப்பான (சேஃப்டி) டச், பாதுகாப்பற்ற (அன் சேஃப்டி) டச், விரும்பாத, தேவையில்லாத (அன்வாண்டட்) டச்.
சேஃப்டி டச்...
அன்சேஃப்டி டச்...
அன்வாண்டட் டச்...
(பாதுகாப்போம்...)
உன் உடலை நீ அறிவாய்!
ஒவ்வொருவருக்கும் மார்புகளின் அளவு வேறுபடும். மார்புகள் வளரும்போது லேசாக வலியும் இருக்கும்... பயப்பட வேண்டாம். மார்பு கொழுப்புகளால் ஆனது... நிப்பிள் என்கிற அதன் காம்பு பல நரம்புகளின் தொகுப்பால் ஆனது. அதனால் அதில் கூடுதல் வலி ஏற்படக்கூடும். சில நேரம் ஒரு நிப்பிள் உள்ளடங்கி இருக்கும்... ஒரு நிப்பிள் வெளியில் இருக்கும். இதுவும் சாதாரணமானது. உன் உடல் திடீரென மாற்றம் அடையும்போது இதெல்லாமே சகஜம். மார்பின் ஓரங்களில் கோடு கோடாக வரும். சருமம் பெரிதாவதாலும், அதன் எலாஸ்டிக் தன்மை குறைவாக இருப்பதாலும்தான் இந்தக் கோடுகள் ஏற்படுகின்றன.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.