Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பெண்கள் மெட்டி அணிவது ஏன்? - what reason womens wearing metti
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
Posted by  Subash Kumar   at 9.41 pm இந்திய கலாச்சாரத்தின்படி திருமணமான பெண்கள் காலில் அணிவது தான் மெட்டி. வெள்ளியால் செய்யப்பட்ட இந...

இந்திய கலாச்சாரத்தின்படி திருமணமான பெண்கள் காலில் அணிவது தான் மெட்டி.

வெள்ளியால் செய்யப்பட்ட இந்த மெட்டியானது பழங்காலத்தில் ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.

ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அது பெண்ணுக்குரிய அணிகலனாகியது.

ஆசையோடு அணிந்து விடும் கணவன்

ஒரு ஆண், ஒரு பெண்ணை மணப்பதற்கு சாட்சியாக அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போடுகிறான்.

இந்த மூன்று முடிச்சின் மூலம், அவளை தனக்கு சொந்தமாக்கி கொள்ளும் கணவன், அதன் பின்னர் நெற்றியில் குங்குமம் வைத்து, அவள் கால் விரல்களில் மெட்டியை அணிந்து விடுகிறான்.

பின்னர் அந்த மெட்டியின் மேல் குங்குமம் வைத்து, தன் மனைவியை வீட்டுக்குள் வரவேற்கிறான்.

கலாச்சாரம் மட்டுமல்ல அறிவியலும் கூட

இந்திய காவியமான இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது, இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் கால் மோதிரமான மெட்டியை கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது.

ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்று புராணக்கதைகளில் கூறப்படுகிறது.

ஆனால் இன்று திருமணமான பெண்கள் சாஸ்திரத்திற்காக அணியும் மெட்டியின் பின்னணியில் மெட்டியும் அடங்கியுள்ளன.

பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top