Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: யானை பிரசவம் சிற்பம் - திருபுனம் கோயிலில்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவ...

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா?

கோயில்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற சொத்து! அதில் அவர்களின் அனுபவமும் ஆராய்சிகளும் உள்ளது!! திறந்த கண்களோடும், செவிகளோடும் கோயில்களை அணுகுங்கள்..அவை நமக்கு கற்றுத்தர நிறைய விஷயங்கள் வைத்துள்ளது!.

நன்றி !!!

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top