Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பெண்களின் மாதவிலக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பாதிக்குமா…?
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கர்ப்பம் என்றாலே குழப்பங்களும் சந்தேகங்களும் மிரைந்த காலமாகும். கர்ப்பமும் பிரசவமும் முடிந்த பின்னர் உங்கள் ஆவலை தூண்டும் அடுத்த விஷயம...

கர்ப்பம் என்றாலே குழப்பங்களும் சந்தேகங்களும் மிரைந்த காலமாகும். கர்ப்பமும் பிரசவமும் முடிந்த பின்னர் உங்கள் ஆவலை தூண்டும் அடுத்த விஷயம் தான் மாதவிலக்கு. பொதுவாக உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை மாதவிலக்கு வெகுவாக பாதிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்துவமாக இருப்பாள். அதனால் அவளின் மாதவிலக்கும் மாறுபட்டே இருக்கும். குழந்தை பெற்ற பின்பு உங்களுக்கு மீண்டும் ஏற்படும் மாதவிலக்கு மற்ற பெண்களுக்கு ஏற்படுவதை போல் அல்லாமல் வித்தியாசமாகவே இருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அது உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாமல் பல மாதங்களுக்கு தடுக்கும். ஆனால் நம்மை சுற்றி நாம் பார்ப்பது சற்று வித்தியாசமானவை.

பல பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கூட பிள்ளை பெற்ற இரண்டு மாதங்களில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விடும். இதனால் நீங்கள தாய்ப்பால் கொடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று உங்கள் மனது குழப்பத்தில் ஆழ்ந்து விடும். ஆனால் அதே நேரம் இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால் அது உங்களின் மாதவிலக்கை தள்ளி போட்டு கொண்டு வரும். தாய்ப்பால் கொடுக்கப்படும் வேளைகள் குறைந்தாலோ அல்லது பால் சுரப்பது குறைந்தாலோ உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாதவிலக்கு திரும்பிய பிறகு, அது உங்களின் பால் கொடுக்கும் தன்மையை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது. அதற்கு பல காரணிகளும் துணையாக நிற்கிறது. உங்கள் குழந்தைக்கு திண்பொருள் ஆரம்பிக்கப்படும் வேளை, உங்கள் குழந்தை இரவில் தூங்கும் மணி கணக்கு, உங்கள் குழந்தை பீடிங் பாட்டிலில் பால் குடிக்கிறதா, அல்லது அதனை சமாதானப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் போன்ற சில காரணங்களை உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம். சரி மாதவிலக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்கும் தன்மையை பாதிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாமா?

கருவளம் திரும்பும்

குழந்தை பெற்ற பிறகு உங்களுக்கு ஏற்பட போகும் முதல் மாதவிலக்குக்கு முன்பாகவே நீங்கள் இழந்த கருவளத்தை மீண்டும் பெறுவீர்கள். அதனால் நீங்கள் மீதும் கர்ப்பம் ஆவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாகே இருக்கும். ஒரு வேளை நீங்கள் மீண்டும் கருவுற்றால் உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பாலை வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டியிருக்கும். மாதவிலக்கால் தாய்ப்பால் கொடுக்கும் தன்மை பாதிப்படைவதற்கு இது ஒரு வழியாகும்.

ஹார்மோன் மாற்றங்கள்

மாதவிலக்கினால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உங்களின் தாய்ப்பால் கொடுக்கும் தன்மையை பாதிக்கும். இதனால் உங்கள் உடல்நிலையிலும் சரி மனநிலையிலும் சரி பல மாறுதல்கள் ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் போது சில பெண்களுக்கு மார்பகங்களில் வலி கூட ஏற்படும்.

சுவையில் மாற்றம்

மாதவிலக்கின் போது உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தாய்ப்பாலின் சுவையில் மாற்றம் ஏற்படலாம். அதன் சுவை குழந்தைக்கு பிடிக்காமலும் போகலாம். அப்படி ஏற்பட்டால் அது தாய்ப்பால் குடிக்கும் அளவு குறையும். இதனால் கூட தாய்ப்பால் கொடுக்கும் தன்மை பாதிப்படையலாம்.

தலைவலி

குழந்தை பெற்ற பிறகு முதல் மாதவிலக்கு வருவதற்கு தலைவலி ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கும். இதனால் உங்களுக்கு கோபமும் எரிச்சலும் உண்டாகும். மாதவிலக்கினால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இவ்வகை தற்காலிக பிரச்சனைகளை உண்டாக்கி பால் கொடுக்கும் தன்மையை பாதிக்கும்.

தாய்ப்பால் சுரப்பது குறைதல்

பால்குடி மறக்கச் செய்ய தொடங்கியவுடன் சில பேருக்கு மாதவிலக்கு ஏற்படும். ஆனால் அதற்கு நேர்மாறானதும் கூட நடக்கலாம். மாதவிலக்கினால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கூட உங்கள் தாய்ப்பால் சுரத்தலை குறைத்து விடலாம். அதனால் இயற்கையான முறையில் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முற்படுங்கள்; பிரவத்திற்கு பிறகு பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது.

வலி மிகுந்த மார்பக காம்பு

மாதவிலக்கின் போது உங்களது மார்பக காம்பில் வலி ஏற்படுகிறதா? அப்படியானால் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் கொஞ்சம் பிரச்சனை ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அவ்வகை சூழ்நிலையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதனால் காம்புகளை பாதுகாக்கும் கவசத்தை பயன்படுத்துவது பிரசவத்திற்கு பின் பின்பற்ற வேண்டிய ஒரு சிறந்த டிப்ஸாகும்.

தாய்ப்பால் கொடுப்பதை தொடருங்கள்

பிள்ளை பெற்ற பிறகு ஏற்படும் மாதவிலக்கின் போது பெண்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் முக்கியமான ஒன்று தான் தாய்ப்பால் கொடுப்பது பாதிப்படைதல். ஆனால் அதற்காக மாதவிலக்கு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி அல்ல. தாய்ப்பால் கொடுப்பதை தொடருங்கள்; இதனால் உங்களின் பால் சுரத்தல் சரிவர இருக்கும். மேலும் சில வகை மார்பக பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம். பிரசவம் முடிந்த பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ்களில் இதுவும் ஒன்
று.

நன்றி!!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top