Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: ஆண் பெண் உறவின் உச்ச கட்ட நிலை
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது ? பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெள...

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும். உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. 

இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன. குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

உச்சக்கட்ட இன்பமும் பெண்குறி இறுக்கமும்

பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச்சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும். முதல்கட்ட இறுக்கங்கள் மிகத்தீவிரமானவை.

உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது. போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.

உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்

பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது…?

உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை. 

பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.

சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை…*

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அதுஎனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர். பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. 

முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.


உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.
உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.

ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை

கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாலுணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.

பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.

செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..?

எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது. அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும்,

இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும் சில பேருக்கு ஆடை அலங்காரத்தைப் பார்த்ததுமே பரவசம் கொள்வார்கள். வயது வித்தியாசமின்றி எந்த வயதினருக்கும் கிளர்ச்சி உண்டாகலாம்.

இன்னும் சிலருக்கு தூங்கும் போது கனவுகள் வந்து அதன் மூலம் கிளர்ச்சி உண்டாகும். விழித்துக்கொண்டிருக்கும் போதே பகல் கனவில் மூழ்குபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

தூக்கத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஒரு இரவில் குறைந்தது ஆறு முறையாவது குறி விரைக்குமாம். அதே போல பெண்களுக்கு குறியின் உள்ளே இன்ப நீர் சுரந்து கிளர்ச்சி உண்டாகுமாம்

17 Mar 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...