Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கலைநயம் மிக்க விக்கிரம சோழன் காலத்து சிற்பம்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
பிட்சாடனர் சிவனின் அவதாரங்களில் இதுவும் ஒன்று, பார்பதற்கு எப்படி ஒரு கம்பீரம் போன்றும் முகத்தில் இருக்கும் தெய்வீக கலையும் வடித்த அந்த ...

பிட்சாடனர் சிவனின் அவதாரங்களில் இதுவும் ஒன்று, பார்பதற்கு எப்படி ஒரு கம்பீரம் போன்றும் முகத்தில் இருக்கும் தெய்வீக கலையும் வடித்த அந்த சிறப்பிக்கு நாம் என்றும் நன்றி கடனை கூறிக்கொண்டே இருக்கணும். இடுப்பில் கட்டப்பட்ட பாம்பின் சுழல் எத்துனை சுற்றுகளை சுற்றி இருக்கின்றன... இறைவனை மனித ரூபங்களில் வடிக்கப்பட்ட காரணமே அதன் மூலமாக நம் உடம்பில் புதைந்து கிடக்கும் யோகா ரகசியங்களை சூட்சுமமாக சொல்லவே. அதனால் தான் எனவோ உடுக்கைமூலமாக இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற ஒலியையும் (ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும்) இடுப்பில் இருக்கும் பாம்பின் மூலமாக மூலாதார சக்தி ஆனா குண்டலினியும், ஆயுதத்தால் நம் மனதில் இருக்கும் அஞ்ஞானம் அழிக்கவும் இதை நம் முன்னோர்கள் படைத்தனர். இந்த ரகசியங்களை புரிந்தவன் யோகி ஆகிறான். புரியாதவன் கடவுளின் படைப்பபுகளின் இந்த பாம்பும் ஒன்று என்று பயத்திலே பாம்பையும் வணங்கி செல்கிறான்.

கைகள் உள்ள மனிதனால் இதன் கைகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. சிவனின் முகத்தையும் கீழே இருக்கிற அந்த பூதகனத்தின் முகத்தையும் பாருங்கள் எப்படி ஒரு வித்தியாசம் பயம், பணிவு, அடக்கம் மூன்றும் அந்த பூதகனத்தின் முகத்தில் இருக்கிறது! சுமார் ஆயிரம் வருடங்களை கடந்து இன்றும் நமக்கு காட்சி கொடுகிறது இந்த சிற்பம். விழுப்புரம் செல்லும் அனைவரும் இந்த கோவிலுக்கு சென்று மறக்காமல் பாருங்கள் !!

இடம் : சிந்தாமணி, விழுப்புரம் மாவட்டம்

கட்டியவர் : விக்ரம சோழன்

நன்றி !!!


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top