கோடை கால அழகு பராமரிப்பு
வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரம் 3 முறை கூந்தலை தரமான ஷாம்பு கொண்டு அலச வேண்டும். வியர்வை சேர்ந்தால் மண்டையின் துவாரங்கள் அடைபட்டு முடி உதிரும். கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வெயிலில் வெளியே செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். எண்ணெய் வைத்தால் தான் முடி படியும் என்பதால் சிலர் எண்ணெய் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். எண்ணெய் வைத்தால் சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். அல்லது முதல் நாள் இரவு வைத்து காலையில் தலையை அலச வேண்டும்.
வெளியே செல்லும் போது முடிபறக்காமலிருக்க ஸ்டைலிங்க் பொருட்களையோ, கண்டிஷனரையோ உபயோகிக்கலாம். எண்ணெயுடன் வெளியே செல்லும் போது அழுக்கும், தூசியும் அதிகம் சேர்ந்து பொடுகு முடி உதிர்வெல்லாம் வரலாம். சிறிதளவு தயிரில் முதல் நாள் இரவே கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறி அலசலாம். இது உச்சி முதல் பாதம் வரை உடலைக் குளுமையாக்குவதுடன் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.
ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும். தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்
கூந்தலுக்கு…
சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும். தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்.
நன்றி!!!
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON