Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கழுகுமலை வெட்டுவான் கோயில்/கழுகுமலை சமணர் பள்ளி / Jain abode Kalugumalai.
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
கழுகுமலையின் சிறப்பு , அந்த மலையின் பின்புறம்  அமைந்து உள்ள ‘ வெட்டுவான் கோயில் ’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி , அந்த...

கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள வெட்டுவான் கோயில்ஆகும்.
மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான்
என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும்.
இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிரமராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள
கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில்-கோவில்பட்டி சாலையில்இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின்வழியாக மேலே ஏறினால்பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாகஏறி விடலாம். 
மலையின் நடுவே ஓரிடத்தில்வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. அங்கே அமைந்து இருந்த சமணர் பள்ளிகளில், சமண மதக்கருத்துகளைப் போதித்தனர்.
வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது (Monolithic). கழுகுமலையின்
ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக்
கோவிலாகச் செதுக்கி உள்ளனர். 
ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கருஅறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்திதிருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும்வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர்.
விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில்கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள். கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள்
உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.
மலையின் பழம்பெயர் அரைமலை’. இன்றைய பெயர் கழுகுமலை’.
ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம்அல்லது திருநெச்சுறம்.
நாட்டுப் பிரிவு: இராஜராஜப்பாண்டி நாட்டுமுடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுற
நாட்டு நெச்சுறம். ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:
1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகநெடுஞ்சடையன்)
2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்).
கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத்
தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். 
இப்போதுதாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர்கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
வெட்டுவான் கோவில் குறித்து, அந்தப்பகுதி மக்களிடையே பல கதைகள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் தேடிச் சேகரித்து எழுதினால்மேலும் பல செய்திகள் பதிவு ஆகலாம்; இந்தப் பணியை, தமிழ் ஆசிரியர்கள், இலக்கியவாதிகள்கழுகுமலை இளைஞர்கள் செய்ய வேண்டும்!..

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top