Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கு? / benefits of breast milk
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்...

உலக அளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உணவு என்றால் அது தாய்ப்பால்தான். இதற்கு இணையான பொருள் எதுவும் இல்லை. பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அருமருந்தாக செயல்படுகிறது. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர். பிரசவித்த தாய்மார்கள் அனைவருக்கும் தாய்பாலில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்திருப்பதில்லை. அது தெரியாத காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு தாய் பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர் சிலர். தாய்ப்பாலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்பவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன். 

பச்சிளம் சிசுக்கள் பிறந்த சிசுக்களுக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் தாய்ப்பாலில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். ஆனால் பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ whey புரோட்டீன். இந்த whey புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். ஆனால் சும்பாலில் caesin-whey புரோட்டீன்தான் இருக்கிறது. பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மென்மையான குடலில் அலர்ஜி ஏற்படும். இதனால் வயிற்றுப் போக்கும் மோஷனில் பிளீடிங் கூட ஆக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். 

வயிற்று வலி வராது தாய்ப்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம். வைட்டமின் டி தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு வருடத்திற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டுமருந்தும் தரவேண்டும். ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக்குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் D சொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும்.

தாய்ப்பால் கட்டாயம் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாயும் சேயும் இணைந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தாய்க்கு பிரசவகால விடுப்பு அளிக்கப்படுகிறது. பிரசவ விடுப்பு முடிந்து வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தாய்பாலை ப்ரிட்ஜில் வைத்து விட்டு செல்லலாம். அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப் படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். சூடு படுத்த வேண்டாம் ப்ரிட்ஜில் இருந்து எடுத்த பாலை எந்த காரணம் கொண்டும் நேரடியாக அடுப்பில் வைத்து சூடு படுத்த கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்ப்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டலாம். அலுவலக நேரங்களில் தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக பிரிட்ஜில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம். இதனால் பால் கட்டுவது தவிர்க்கப்படும். பூண்டு சாப்பிடுங்க தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காவிட்டால் சத்தான உணவுகளை உட்கொள்ளலாம். 

அசைவ உணவுகளில் மட்டன், கருவாடு போன்றவைகளை தாய்மார்கள் உண்ணவேண்டும். அதேபோல் வெள்ளைப்பூண்டு, வெல்லம் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் சிறந்த நன்மைதான். மார்பகப் புற்றுநோய் ஏற்படாது. உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. அதேபோல் நீரிழிவு நோயும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top