Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: கரு முதல் குழந்தை வரை...
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும் . மலடி , மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி , ஒரு பெண் ஒருகுழந்த...


தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர் புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

கருத்தரிக்கக்கூடிய காலம்

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்து கரு உண்டாகும்.
சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.

ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையதுஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது.
ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.

கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது.
கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.

ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன
கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது.

கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.

பிறப்புறுப்புக்கள் நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.

கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.

கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.

மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.

5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.

6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.

கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.

ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.


கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.

கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.

அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது

கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன
கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள்
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.


கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

baby

12 Feb 2017

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...