பிறந்த
குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தான் தாய்ப்பால். இந்த தாய்ப்பாலானது
பிறந்த குழந்தைகளுக்கு போதிய அளவில் கிடைக்காவிட்டால், அவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைந்து, அவர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே
குழந்தைகளுக்கு அவ்வப்போது தவறாமல் தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும். ஆனால் சில
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பின் அளவானது குறைவாக இருக்கும். இதனால்
அவர்களால் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். இதற்கு
முக்கிய காரணம் பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை,
உடல் வறட்சி போன்றவை.
ஆகவே
தாய்மார்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுரக்கும் தாய்ப்பாலின் அளவை
அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இங்கு தாய்ப்பால் சுரப்பின் அளவை
அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சித்து
தாய்ப்பாலின் சுரப்பை அதிகரித்து, குழந்தையின் ஆரோக்கியத்தைப்
பாதுகாத்திடுங்கள்.
தண்ணீர்
தண்ணீர்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்காது. ஆனால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பதற்கு
உடல் வறட்சி ஒரு முக்கிய காரணம். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவு குறையும். எனவே தாய்ப்பால் கொடுக்கும்
பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கால்சியம் நிறைந்த உணவுகள்.
கால்சியம்
அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பால், மற்றும் பால் பொருட்கள், சோயா பொருட்கள், மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து
அதிகம் நிறைந்த தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதன் மூலமும்
தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.
சீரகம், சோம்பு
சீரகம் சோம்பு
போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பின்
அளவு அதிகரிக்கும்.
பாதாம்
தினமும்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாதாமை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பாலின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
வெந்தயம்
பிரசவத்திற்கு
பின் பெண்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து வர வேண்டும். இதன் மூலம் அதில் உள்ள
சத்துக்களால் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON