எண்ணங்கள், கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், குரல் பதிவுகள் என எந்த ஒன்றையும் மிக இலகுவாகவும்
வேகமாகவும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் சேவை பெரிதும் உதவுகிறது.
ஒவ்வொரு தனி நபர்கள் மாத்திரம் இன்றி வணிக நிறுவனங்களாலும்
பயன்படுத்தப்பட்டுவரும் வாட்ஸ்அப் சேவையை முற்றிலும் இலவசமாக பயன்படுத்துவதற்கான
வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்த விடயமே.
இதன் புதிய பதிப்பில் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதற்கான
வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பகட்டமாக இதன் மூலம் PDF ஆவணங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
நீங்கள் ஆண்ட்ராய்டு மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் எனின்
வாட்ஸ்அப் செயலியை 2.12.493 எனும் பதிப்புக்கு
மேம்படுத்த வேண்டும். இந்த பதிப்பு இதுவரை
கூகுள் ப்ளே ஸ்டோருக்கு வழங்கப்படவில்லை. என்றாலும் கீழே வழங்கியுள்ள இணைப்பின்
மூலம் புதிய பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
ஐபோன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர் எனின் நேரடியாக ஆப்
ஸ்டோர் ஊடாக வாட்ஸ்அப் செயலியை புதிய பதிப்புக்கு மேம்படுத்துவதன் மூலம்
மேற்குறிப்பிட்ட வசதியை பெறலாம்.
நீங்கள் வாட்ஸ்அப் செயலியை புதிய பதிப்புக்கு
மேம்படுத்தியதன் பின் Attachment
குறியீட்டை சுட்டும்போது Document எனும் புதியதொரு வசதி
கிடைக்கும் பின்னர் அதன் மூலம் PDF ஆவணங்களை தெரிவு செய்து பகிர்ந்துகொள்ளலாம்.
அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் PDF ஆவணத்தை தொடர்ச்சியாக சுட்டும்போது பெறப்படும்
சாளரத்தில் Share >
WhatsApp என்பதை தெரிவு செய்வதன் மூலம் அதனை உரிய நபருடன் பகிர்ந்து
கொள்ளலாம்.
குறிப்பு: உங்கள் நண்பரும் புதிய பதிப்பை பயன்படுத்தினால்
மாத்திரமே பகிர்ந்து கொள்வதற்கான வசதி கிடைக்கும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON