Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: தங்கள் கணவருக்காக பெண்கள் கட்டின உலக அதிசயங்கள் தெரியுமா? / Indian Monuments built by women
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
தாஜ்மஹாலின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறோம். அது மும்தாஜ் என்னும் தன் காதல் மனைவிக்காக ஷாஜகான் எனும் அரசனால் கட்டப்பட்டது என்பதும்...

தாஜ்மஹாலின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறோம். அது மும்தாஜ் என்னும் தன் காதல் மனைவிக்காக ஷாஜகான் எனும் அரசனால் கட்டப்பட்டது என்பதும், அதன் கட்டிடக்கலை சிறப்புக்களும் நாம் அறிந்ததே. மனைவிக்காக கணவன் கட்டிய கட்டிடத்தின் சிறப்புகள் ஒரு புறம் இருக்க, கணவனுக்காக ஏன் மனைவிகள் எதையும் கட்டவில்லை என கேள்விகள் எழலாம். அது உண்மையென்றால் நம் அறியாமைதான். உண்மையில் அப்படி பெண்கள் தங்கள் கணவருக்காக கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அதிலும் உலகம் வியக்கும் கட்டிடங்கள் நம் இந்தியாவில், நமக்கு அருகிலேயே... வாருங்கள் அவற்றைப் பற்றி காணலாம்.

விருபக்சா கோயில், பட்டக்கல், கர்நாடகம்
புகழ்பெற்ற விருபாக்சா கோயில், கர்நாடக மாநிலம் பட்டக்கல் என்ற இடத்தில் உள்ளது. கிபி 740ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கோயிலை தனது கணவர் இரண்டாம் விக்ரமாதித்யனுக்காக அவரது மனைவி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பல்லவ மன்னர்களுடன் நடைபெற்ற போரில் வெற்றி கண்டதற்காக அவரின் வெற்றி சின்னமாக இந்த கோயிலை கட்டியுள்ளார் அவரது மனைவி.


இத்இமாத் உத் தௌலா
மிர்ஸ் காயிஸ் பேக் என்பவரின் மனைவி ஜான்ஹி பேகம் தன் கணவருக்காக கட்டிய நினைவுச் சின்னம் இதுவாகும்


ஹிமாயூனின் கல்லறை
ஹிமாயூனின் கல்லறை டில்லியின் முக்கிய சுற்றுலாத் தளமாகும். பெர்சியன் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்டுள்ள இந்த இடம் மிகவும் அழகாகவும் இருக்கிறது. முகலாய மன்னர் ஹிமாயூனின் மரணத்துக்கு பிறகு அவரது மனைவி இந்த கட்டிடத்தைக் கட்டியுள்ளார்.

ராணி கி வாவ் the queen's stepwell
உதயமதி ராணி என்பவரின் கணவர் பீம் தேவ், சோலங்கி வம்சத்தின் அரசனாவார். அவரது கணவருக்காக உதயமதி 1063ம் ஆண்டு கட்டியதே இந்த ராணி கி வாவ். இது 64 மீ நீளமும், 27 மீ அகலமும் கொண்டுள்ளது. யுனெஸ்கோவால் உலக சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


மிர்சான் கோட்டை
உத்தர்கண்ட் மாநிலம் உத்தர்காசியில் அமைந்துள்ள இந்த இடம் ஒரு பெண்ணால் தன் கணவனுக்காக கட்டப்பட்டுள்ளது. சென்னபைரவி எனும் பெயருடைய அந்த பெண் கட்டிய இந்த இடம் இங்குள்ள 9 கிணறுகளுக்காக புகழ்பெற்றது.

காயிர் அல் மலாஸ்
1561ம் ஆண்டு இந்த இடம், முகலாய பேரரசர் அக்பருக்காக கட்டப்பட்டது. மகா அங்கா என்பவர் அக்பரின் அரசவையில் மிக பலம் கொண்ட பெண். இவர்தான் அக்பருக்காக இந்த கட்டிடத்தை எழுப்பினார் என்பது வரலாறு.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top