Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உங்கள் வெள்ளை நிறத் துணி புதிது போல் மின்ன வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க. The most effective way to make the white clothes white again
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மஞ்சளாக இருக்கும் வெள்ளை நிறத் துணியை ஓர் எளிய பொருள் கொண்டு வெள்ளையாக்கலாம் . இப்போது வெள்ளை நிறத் துணியை வெள்ளையாக ஜொலிக...
மஞ்சளாக இருக்கும் வெள்ளை நிறத் துணியை ஓர் எளிய பொருள் கொண்டு வெள்ளையாக்கலாம். இப்போது வெள்ளை நிறத் துணியை வெள்ளையாக ஜொலிக்க வைக்கும் எளிய வழி குறித்து காண்போம்.

நம் ஒவ்வொருவரிடமும் வெள்ளை நிறத்தில் உடைகள் இருக்கும். பலரிடம் அந்த வெள்ளை நிற உடை மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் உங்கள் விருப்பமான வெள்ளை நிற உடை, இப்படி அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருப்பதைக் கண்டால் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் மஞ்சளாக இருக்கும் வெள்ளை நிறத் துணியை ஓர் எளிய பொருள் கொண்டு வெள்ளையாக்கலாம். இப்போது வெள்ளை நிறத் துணியை வெள்ளையாக ஜொலிக்க வைக்கும் எளிய வழி குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
பொட்டாசியம் பெர்மாங்கனேட் - சிறிது
தண்ணீர் - 10 லிட்டர்
டிடர்ஜெண்ட் பவுடர் - 200 கிராம்


செய்முறை 1
10 லிட்டர் நீரில் சிறிது பொட்டாசியம் பெர்மாங்கனேட் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்படி தயாரிக்கும் போது கலவை பிங்க் நிறத்தில் வரும். ஆனால் அளவுக்கு அதிகமாக பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை சேர்க்க வேண்டாம். அது அடர் ஊதா நிறத்தில் மாறி, பின் துணியே நாசமாகிவிடும். பின்பு டிடர்ஜெண்ட் பவுடரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

செய்முறை 2
பின்பு அதில் வெள்ளைத் துணியைப் போட்டு, குறைந்தது 4-5 மணிநேரம் ஊற வையுங்கள். ஆனால் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைப்பது இன்னும் சிறந்த பலனைத் தரும்.

செய்முறை 3
பின் மறுநாள் காலையில் வாஷிங் மிஷின் இருந்தால், அதில் துணியைப் போட்டு எப்போதும் போன்று துணியை துவையுங்கள். இல்லாவிட்டால், எப்போதும் போன்று துவையுங்கள். இதனால் உங்கள் வெள்ளைத் துணி புத்தம் புதிது போல் மின்னும்.



வேறொரு வழி 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை டிடர்ஜெண்ட் பவுடருடன் கலந்து கொள்ளுங்கள். பின் எப்போதும் போன்று துணியை ஊற வைத்து, துவைத்தெடுங்கள்


About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top