தற்காலத்தில் தங்களின் அழகை
வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இயற்கையை மீறி சில செயற்கைத்
தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி
பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை...
தற்போது, எகிப்து நாட்டில் உள்ள பெண்களின் அழகின்
ரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
எகிப்திய நாட்டு பெண்கள்
குளிக்கும் போது தங்களின் உடல் முழுவதும் பாலையும், தேனையும் ஒன்றாக கலந்து தேய்த்துக்
குளிக்கிறார்கள். பால் மற்றும் தேன் சருமத்தில்
அதிக ஈரப்பதத்தை அளிப்பதால், அவர்களின்
சருமம் மிகவும் மிருதுவாக இருக்கிறது.
உடலில் இருக்கும் இறந்த செல்களை
நீக்க, கடல் உப்பை
தண்ணீரில் கரைத்து, அதை உடல் மற்றும் முகத்திற்கு தினமும்
தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதனால் சருமத்தில் தேங்கி
இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் மென்மையாக இருக்கிறது.
வெந்தயத்தில் ஆன்டி-
ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால், இவை
இளமையை நீட்டித்து, முகத்தில் சுருக்கம் ஏற்படாமல்
தடுக்கிறது. இதனால் தினமும் வெந்தயத்தை
அரைத்து முகத்தில் போட்டு குளிப்பதுடன், வெந்தய
டீயை அதிகமாக குடிக்கின்றார்கள்.
பாதாம் எண்ணெயை தினமும்
முகத்தில் தேய்த்துக் குளிப்பதால், முகத்தில்
நெகிழ்வுத் தன்மையும், மென்மையும் அதிகரித்து, இளம் வயதில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதனால் அவர்கள்
பாதாம் எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இயற்கை குணம் நிறைந்த சோற்றுக்
கற்றாழை, சுருக்கங்கள்
இல்லாத சருமத்தையும், பளபளப்பையும் தருவதால், எகிப்து நாட்டு பெண்கள் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும்
சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகிறார்கள்.
எகிப்து பெண்கள் மேக்கப்
செய்யும் போது, அவர்கள்
பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் முழுவதும் இயற்கை நிறைந்த பொருட்களை
பயன்படுத்துகிறார்கள்.
கைகளில் உள்ள நகம், தலைமுடி ஆகியவற்றிற்கு மருதாணி மூலம்
நிறத்தை அளிக்கின்றனர். பீட்ரூட்டை காயவைத்து பொடி
செய்து, அதை உதட்டிற்கு
லிப்ஸ்ட்டிக்காகவும், கண் இமைகளுக்கு வண்ணமாகவும்
தீட்டுகின்றனர்.
காய்ந்த பாதாம் பருப்பை எடுத்து
எரித்து அதை கண்களுக்கு போடும் மைகளாக பயன்படுத்துகின்றார்கள்.
ஆனால்.., நம் நாட்டில் என்ன செய்கிறார்கள்..?
கார்ப்பரேட் கம்பெனிகள் விற்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
ரசாயன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
நமது முன்னோர்கள் விட்டு சென்ற
சீகைக்காய், கடலை மாவு
போன்றவற்றை கூட நமது நாட்டு பெண்கள் மறந்து விட்டார்கள்.. இனியாவது விழித்து
கொள்ளுங்கள்..
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON