பதில்:
யோகா என்பது உடல் பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது, மூச்சைப் பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது, இவையெல்லாம் யோகா அல்ல.
யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.
அதாவது உடல், மனம் இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.
யோகா என்றால், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,
நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும், நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருந்தால் அதுதான் யோகா.
எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.
கேள்வி..
யோகா என்பது எல்லோருக்குமானதா..? இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?
நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான். ஏனென்றால்,
ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை, அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ, உணர்ச்சியின் மூலமாகவோ, தங்கள் உடலின் மூலமாகவோ, தங்களின் சக்தியின் மூலமாகவோ, ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.
மற்றும்,
மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.
கேள்வி...
பிராணாயம் என்றால்..?
மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.
கேள்வி...
தியானம்.....?
ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்சியே தியானம் ஆகும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.