பெருஞ்சாணி அணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையாகும். இது கன்னியாகுமரியிலிருந்து
85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய்
செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும்.
இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின்
தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ.
கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON