Home
»
HISTORY HEROES
»
Nanjil Nadu
»
குமரி மாவட்டம்
»
நாஞ்சில் நாடு - Nanjil Nadu
»
வரலாற்று நட்சத்திரங்கள்
» இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் / Eustachius Benedictus de Lannoy
மன்னர் முன்பு தளபதி இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனோய் சரணடைவது
குறித்த ஓவியம்
இயுஸ்ட்டாச்சியஸ் பெனடிக்ட்டஸ் டி
லனோய் (Eustachius Benedictus de Lannoy, 1715 – ஜூன் 1, 1777)
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு ஃபிளெமியர் (Flemish) ஆவார்.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் வணிக நிலையொன்றை இந்தியாவின் மேற்குக் கரையில்
உள்ள குளச்சலில் நிறுவுவதற்காக அக்கம்பனியின் கடற்படைத் தளபதியாக அனுப்பப்பட்டார்.
ஆனால், இம் முயற்சியின்போது 1741 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர்ப் படைகளுடன் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து போர்க்கைதி
ஆனார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் குளச்சல் போர் என்று
அழைக்கப்படுகிறது. டி லனோய் சிறைக் கைதியாக இருந்த போது அரண்மனைப் பணியில் இருந்த
நீலகண்ட பிள்ளை என்பவரின் நண்பரானார். பின்னர் நீலகண்ட பிள்ளை கத்தோலிக்கராக மதம்
மாறினார். இந்த நீலகண்ட பிள்ளையே கோட்டார் மறைமாவட்டத்தின் மறைசாட்சி தேவசகாயம்
பிள்ளை ஆவார்.
இதுதான் தளபதி ”டி லனாய்” கல்லறை. சர்ச் வடிவில்
இருக்கும் தோற்றத்தில் வெளியே தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு
குறிப்புக்கள் காணப்படுது
Tomb of Eustachius Benedictus de Lannoy
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால்
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்ட வர்மா
ஒப்புக்கொண்டார். ஆனால் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையில் சேர விருப்பம்
தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது 26.
அபோது தான் அவர் உதயகிரிக்கோட்டையை
கட்டினார் கி.பி. 1600ஆண்டு இந்த
கோட்டைகட்டப்பட்டதாகவும், பின்னர்
பேரரசர் ராஜராஜ சோழன்படையெடுப்பால் பாதிக்கோட்டை அழிந்துபோனதாகவும், வரலாறுகள் கூறுகின்றன.
வேநாடு மன்னர் மார்த்தாண்டவர்மா
1729 ம் ஆண்டுஇந்தக் கோட்டையை புதுப்பித்துக் கட்டியுள்ளார். 90ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த
கோட்டையைமுன்னின்று கட்டியவர் டி லனோய் என்ற கடற்படைதளபதி ஆவார். இந்தக்
கோட்டைக்குள் 200 அடி உயரமலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது. முழுவதும்
கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டைதில்லாணைக் கோட்டை என்றும்
அழைக்கப்படுகிறது.இந்தக் கோட்டைக்குள் துப்பாக்கி வார்ப்படம் செய்யும்உலை ஒன்று
உள்ளது. மன்னர் காலத்தில் இங்குதுப்பாக்கிகள் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்தக்கோட்டையை பல ஆண்டுகள் முன்னின்று கட்டியதளபதி டி லனோய். தனது வாழ்நாளின்
பெரும்பகுதியைஇந்தக் கோட்டையில் தான் கழித்துள்ளார்.
வாளும், ஈட்டியும் தான்
போர் என்று நினைத்தவர்களுக்கு டிரில் பயிற்சி அளித்ததோடு துப்பாக்கி, பீரங்கி இயக்கவும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அவரை
படைத்தளபதியாக்கினார். தொடர்ந்து 35 வருடங்கள் மார்த்தாண்ட வர்மா படையில்
பணியாற்றிய டிலனாய் 1777 ல் காலமானார்.
இயூஸ்ட்டேக்கீயஸ் டி லனாய் கல்லறை. Tomb of Eustachius Benedictus de Lannoy
அவருடைய உடல் உதயகிரிக்கோட்டையில்
அடக்கம் செய்யப்பட்டது. அருகில் அவருடைய மனைவி, மகனுடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மூன்று
கல்லறைகளும் தேவாலய வடிவில் எழுப்பப்பட்டுள்ளது. கோட்டையினைச் சுற்றிவரும்போது,
ஒரு அமைதியானசூழல் இருப்பதை காணலாம். விசித்தரமான தனிமைஉணர்வு
ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.கோட்டையினுள் பெரிய அரண்மனையோ, கோவிலோஇல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு
அளப்பரிய பணிகளைமன்னர் மார்த்தாண்டவர்மாவும், தளபதி டி லனோயும்திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கோட்டைஉருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதிஉருவானது. மன்னரால்
பொன்மனை அணையும்,கால்வாயும் உருவாக்கப்பட்டதால், விளை நிலங்கள்செழித்து
கன்னியாகுமரியை வளமாக்கின.
இந்தக் கோட்டை ஒரு காலத்தில், கைதிகளை
காவலில்வைத்திருக்கும், களமாகவும் விளங்கியுள்ளது.திப்புசுல்தானுக்கு
எதிராக கிழக்கிந்திய கம்பெனிபோரிட்டபோது பிடிபட்ட கைதிகளை கிழக்கிந்தியகம்பெனி
இங்கு பாதுகாப்பாக வைத்திருந்ததாககூறப்படுகிறது. அண்மையில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்கோட்டையின்
அருகே ஒரு சுரங்கப்பாதையினைகண்டுபிடித்துள்ளனர். அந்தப் பாதை கோட்டையிலிருந்துபத்மநாபபுரம் அரண்மனைக்கு ரகசியமாக செல்லும்வகையில் அமைந்துள்ளது.
மனைவி
மர்கெரெட்டா, டி லனாய் மற்றும் அவருடைய மகன் ஜான் டிலனாய் கல்லறை
De Lannoy Tomb
உதயகிரி முற்காலத்தில் ராணுவ
கேந்திரமாகவே இருந்திருக்கிறது. நிரந்தர ராணுவத்தை திருவிதாங்கூர் உருவாக்கிக்
கொண்டபோது அதை தங்கவைப்பதற்கான முகாமாக இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதி
கோட்டையாக தெரிவுசெய்யப்படக் காரணமே இதற்குள் உள்ள பெரிய குன்றுதான். இதற்குள்
பெரிய கோயிலோ அரண்மனையோ இல்லை. டிலனாய் மர்மங்களால் சூழப்பட்ட சரித்திர புருஷர்.
மன்னரின் விசுவாசமான நண்பராக இருந்தவர். படைகளுக்கு நெருக்கமானவர். ஆனால்
அவருக்கும் தளவாய் ராமய்யனுக்கும் இடையே பனிப்போர் இருந்தது. டிலனாய் இறந்ததுமே
அவரது இடம் வரலாற்றில் குறுக்கப்பட்டது.
பழைய ஒரு மாதாகோவில் போன்ற அமைப்பு
இடிந்து கூரையில்லாமல் குட்டிச்சுவராக நிற்கிறது. அதற்குள்தான் டிலனாய் அவரது
தம்பி ஆகியோரின் சமாதிகள் உள்ளன. பிற்பாடு அது ஒரு முக்கியமான சமாதியிடமாக ஆகி
திருவிதாங்கூரில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ரெசிடெண்ட்
ஆட்சியைச்சேர்ந்த சில அதிகாரிகளின் சமாதிகளும் அங்கே உள்ளன. அவர்கள் யார் என்பது
பற்றி ஒன்றும் தெரியவில்லை.
‘அனாதைமாதிரி கிடக்கிறார் ‘இந்த
மண்ணுக்கு டிலனாயின் கொடை வேறு எவரது கொடையைவிடவும் சிறியது அல்ல. இங்கே வலுவான
மைய ஆட்சியை, சட்டம் ஒழுங்கை அவர் நிலைநாட்டவில்லை என்றால்
இந்தியாவின் வளம்மிக்க மாவட்டங்களில் ஒன்றாக கன்யாகுமரி ஆகியிருக்காது.
கோட்டைகள்சூழ அமைதி உருவான பிறகுதான் பொன்மனை அணையும் கால்வாயும் உருவாக்கப்பட்டன.
நாஞ்சில்நாட்டு விளைநிலங்கள் உருவாயின. ஆனால் வரலாறு அப்படியே அவரை மறந்துவிட்டது.
ஒரு சாலைக்காவது நாம் அவரது பேரைபோடவேண்டும்’
கோட்டை தற்போது தமிழக வனத்துறையின்கட்டுப்பாட்டில்
உள்ளது கண்டுகொள்ளப்படாமல் இருந்த
உதயகிரிக்கோட்டை இப்போது புதுப்பிக்கப்பட்டு மான்பூங்கா, மயில்பூங்கா,
விருந்தினர் விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை
கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தக்கலை
செல்லும் பேருந்தில் ஏறி புலியூர்க்குறிச்சியில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து
30 அடி தொலைவில் அமைந்துள்ளது இந்த உதயகிரிக்கோட்டை.
About Author

Advertisement

Related Posts
- மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை திருத்தலம் புனித பயணம் - Blessed Devasahayam Pillai Church Arvalvaimozhi04 May 20150
இருப்பிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஆரல்வாய்மொழி அருகே காற்றா...Read more »
- குமரித் தந்தை மார்ஷல் நேசமணி வரலாறு - marshal A. nesamony History27 Aug 20170
தென் தமிழ் நாட்டின் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரி மாவட்டத்தின் தவப் புதல்வனாக வந்து பிறந்த...Read more »
- ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் வரலாறு /பேச்சிபாறை அணைகட்டியவர் / Humphrey Alexander Minchin history28 Aug 20140
ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் இவர் ஐரோப்பிய பொறியாளர் ஆவார் இவர் 08.10.1868 ஆண்டு பிறந்தார். அவர்...Read more »
- டச்சுப் படை வென்ற முதல் தமிழன் மாவீரன் அனந்த பத்மனாபன் நாடார் - Nadar Tamil hero Ananta patmanapan25 Dec 20142
மாவீரன் அனந்த...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.