கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்
natural home remedies remove dark spots
பெரும்பாலானோரின் அழகை கெடுக்கும் விஷயங்களில் முகப்பரு ஒன்றென்றால், அதனால் உண்டாகும் கருமையான புள்ளிகளினாலும் பலரது முகத்தின் அழகானது பாழாகிறது. இத்தகைய கரும்புள்ளிகளைப் போக்க பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும், சிலருக்கு அந்த கரும்புள்ளிகள் நீண்ட நாட்கள் இருந்து அழகை பாழாக்கிக் கொண்டிருக்கும்.
எனவே அழகைப் பாழாக்கும் கரும்புள்ளிகளைப் போக்க க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தி, சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்காமல், அதனைப் பாதுகாக்கும் வண்ணம் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரித்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன், பொலிவோடு இருக்கும். இப்போது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை இயற்கையாக எப்படி போக்குவது என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள
சிட்ரிக் ஆசிட்டானது கரும்புள்ளிகளை மிகவும் எளிதில் போக்கிவிடும். அதற்கு
எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த
நீரில் கழுவி வந்தால், விரைவில் கரும்புள்ளிகளானது நீங்கிவிடும்.
சந்தன ஃபேஸ் பேக்
சந்தனப் பொடியுடன், கிளிசரின், எலுமிச்சை சாறு
மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு, நன்கு உலர
வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள்
மறைந்துவிடும்.
பூண்டு மற்றும் வெங்காய சாறு
பூண்டு
மற்றும் வெங்காய சாற்றினை ஒன்றாக கலந்து, முகத்தில்
கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற
வைத்து, நன்கு கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
தக்காளி
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை இரண்டாக வெட்டி, முகத்தில்
கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால், அவை கரும்புள்ளிகளை மறையச் செய்யும். மேலும் இந்த முறையை
தினமும் முகத்திற்கு செய்து வந்தால், முகத்தில் உள்ள
கருமை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
தேன் மற்றும் பால்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
தேன் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், அவை
கரும்புள்ளிகளை மாயமாக மறையச் செய்துவிடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் எண்ணற்ற
நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் கரும்புள்ளிகளைப் போக்குவது. அதற்கு
கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தினமும் தடவி உலர வைத்து, கழுவி வர வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக
இருக்கும்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள நொதிகள்
சருமத்தின் மென்மையை அதிகரிப்பதோடு, மெலனின்
உற்பத்தியை தடுக்கும். எனவே பப்பாளியை மசித்து, அதனை முகத்தில்
தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON