எலும்பு முறிவு சரி செய்யும் எலும்பொட்டி - ORMOCARPUM COCHINCHINENSE.
மூலிகையின் பெயர் -:
எலும்பொட்டி.
தாவரப்பெயர் :– ORMOCARPUM COCHINCHINENSE.
தாவரக்குடும்பம் :– FABACEAE..
வளரியல்பு :– எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இது 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். அவை 9 – 17 இணுக்குகள் இருக்கும். இலை 1.5 சி எம்.முதல் 2.5 சி.எம் நீளம் இருக்கும். இவைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்ச்சியம் அதிகமாக இருக்கும். விதைகள் ஓவல் வடிவத்தில் பிரவுன் நிறத்தில் இருக்கும்.ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். விதை அக்டோபர் மாதத்தில் எடுக்க வேண்டும் இது தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது
கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில்
குணமாவதைக் கண்டரிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில்
இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில்
குணமாவதைக் கண்டறிந்தனர். இதை இரகசியமாக வவைத்திருந்தனர். இதனால் இதற்குக்
காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு
நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது
நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில்
இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள். பின் அதன்
மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில
மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில்
செய்து வருகிறார்கள்
மிகவும் சிறப்பான பொதுநலச்சேவைப்பகுதி.பழமைகளை உதாசீனம் செய்வதே
ReplyDeleteபுதுமை என்ற மாயத்தோற்றத்தில் மக்களின்
இயல்பான எளிய வாழ்க்கை முறைகளின் நமது பொகாகிஷங்ளை
வெளியே கொணர்ந்து
தரும் பண்பாடு
போற்றற்குரியது
வாழ்த்துக்கள்
D v subba reddy
,dvsreddy36@gmail.com
:) unmai thaan
Delete