Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: உங்கள் கணவன் (அ) மனைவியோடு செல்லவேண்டிய இடங்கள்! / places visit india with your spouse
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
இந்தியத் திரைப்படங்களில் அடிக்கடி டூயட் பாட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு ஹனிமூன் கொண...
இந்தியத் திரைப்படங்களில் அடிக்கடி டூயட் பாட வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பல வெளிநாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு ஹனிமூன் கொண்டாட வருபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கல்யாணம் நடப்பதென்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி திருமணம் முடிந்த பிறகு ஹனிமூன் செல்வதோ, கணவன் அல்லது மனைவியோடு எங்காவது தனிமையில் செல்ல நினைப்பவர்களுக்கு இந்தியாவிலேயே ஏராளமான இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே உங்கள் காதலரை கூட்டிக்கொண்டு காதல் வானில் பறக்க தயாராகுங்கள்.

ஸ்ரீநகர் 
ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.

குல்மார்க் 
குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள். நீங்கள் சாதாரணமாக மலர்ப்படுக்கை தானே பார்த்திருப்பீர்கள். இங்கு வாருங்கள் உங்கள் காதல் துணையோடு டூயட் பாட ஒரு மலர் மைதானமே இங்கு காத்திருக்கிறது.

லடாக் 
உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். அழகிய ஏரிகளும், மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும், மலை உச்சிகளும் லடாக்கின் முக்கிய ஈர்ப்புகள். எல்லா வகையிலும் உங்கள் காதலரோடு சிறப்பான நேரத்தை செலவிட லடாக் வெகு பொருத்தமான இடம்.
மணாலி 
சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மணாலி மலைவாசஸ்தலம் தேவர்கள் வசிக்கும் பூமி' என்று அழைக்கப்படுகிறது. குலு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் குலுவை போலவும், சிம்லா போலவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலமாக திகழ்கிறது. 
தர்மஷாலா 
இமாச்சல பிரதேசத்தின் அழகின் அழகாக விளங்கும் தர்மஷாலா மனதை மயக்கும் ஒரு மலை வாசஸ்தலமாகும். தர்மஷாலாவின் பெரும்பான்மை பகுதிகள் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருப்பதோடு, இக்காடுகளில் நீங்கள் ஓக் மற்றும் ஊசியிலை மரங்களைக் காணலாம். அதோடு மூன்று பக்கங்களிலும் தௌலதர் மலைத் தொடர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது தர்மஷாலா. இப்படி ஒரு சூழ்நிலையில் உங்கள் காதல் துணையோடு இருக்கின்ற தருணத்தை கொஞ்சம் சித்தித்து பாருங்களேன்!!!

ஆலி 
ஆலியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான கேபிள் கார் வசதி சுமார் 5 கிலோமீட்டர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலா என்று அழைக்கப்படும் இந்த கேபிள் கார்களில் 13500 அடி உயரத்தில் உங்கள் காதலரோடு செல்லும் திரில்லிங் பயணத்தை உங்களால் மறக்கவே முடியாது.

நைனித்தால் 
'இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. நைனித்தால் நகரைச் சுற்றிக் காணப்படும் சிகரங்களை குதிரைச் சவாரி செய்து அடைவதும், இந்நகரின் கவின் கொஞ்சும் ஏரிகளில் படகுச் சவாரி செய்வதும் அற்புதமான அனுபவங்களாகும். இவ்விரண்டு பயணங்களுக்கும் உங்கள் காதல் துணையோடு சென்று வாருங்கள், அந்த சந்தோஷ அனுபவத்தை அளவிட முடியாது.

ஜெய்சல்மேர் 
மலைகள், அருவிகள், கடல் என்று திரும்ப திரும்ப சுற்றிப்பார்த்து அலுத்துவிட்டதா?..அப்ப உங்கள் காதலரை அழைத்துக்கொண்டு பாலைவனத்தில் ஒட்டகச் சவாரி செய்து பாருங்களேன்! தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும், அதே சமயம் அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

உதய்பூர் 
உதய்பூரில் உள்ள ராஜரீக அரண்மனைகளும், ஆடம்பர ஹோட்டல்களும் உங்களை மகாராஜாவாகவும் அல்லது மகாராணியாகவும் உணரச் செய்யும். இங்குள்ள லேக் பேலஸ் பகுதிக்கு உங்கள் காதலரை அழைத்துக்கொண்டு ஒரு முறை சென்று வாருங்கள்.

மஹாபலேஷ்வர் 
மஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.

கூர்க் 
இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலப்புழா 
ஆலப்புழாவின் மனம் மயக்க வைக்கும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும், அதன் நடுவே உங்கள் காதல் துணையோடு படகு இல்லத்தில் பயணம் செய்யும் அனுபவமும் மெய்மறக்கச் செய்து உங்கள் உணர்வுகளை எங்கோ இழுத்து சென்றுவிடும்.

மூணார் 
கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
 
ஊட்டி 
மலைகளின் ராணியாக திகழும் ஊட்டியை பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. நீலகிரி மலைப்பாதையில் மலைரயிலில் உங்கள் காதலரோடு இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே ஊட்டிக்கு செல்லும் அனுபவமே போதும்! அதன் பிறகு ஊட்டியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா சிகரம், ஊட்டி ஏரி, குதிரைச் சவாரி என்று அற்புதமான ஹனிமூன் அனுபவத்தை ஊட்டி உங்களுக்கு தர காத்திருக்கிறது.

கொடைக்கானல் 
தமிழ்நாட்டில் எங்கு காதலர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால் அது கொடைக்கானலாகத்தான் இருக்கும்.

டார்ஜீலிங் 
இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு பரந்து விரிந்து காணப்படும் பச்சைத் தேயிலைத் தோட்டங்கள், அழகிய இயற்கைக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த மலைவாசஸ்தலத்தை புகழ்பெற்ற ஹனிமூன் ஸ்தலமாக திகழச்செய்துகொண்டிருக்கின்றன.


பாண்டிச்சேரி 
பாண்டிச்சேரியின் அழகிய கடற்கரைகளில் காத்து வாங்கிக்கொண்டு காதல் செய்வதும், கடலோர ரிசார்ட்டுகளில் உல்லாசமாக பொழுதைக் கழிப்பதும் அழகான அனுபவமாகும். இதன் காரணமாகவே இங்கு காதல் ஜோடிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

 
அந்தமான் நிகோபார் தீவுகள் 
கன்னிமை குறையாத கடற்கரைகள், ஸ்கூபா டைவிங் போன்றவற்றோடு அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும், வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம். இதுபோன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி.



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top