Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டம் - Mandaikadu Bagavathi Amman Koil Kanyakumari Dist
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஆகும்.இது பெண்களின் சபரிமலை என்று...
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஆகும்.இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில் 10 நாட்கள் திருவிழா,எட்டாம் கொடை மற்றும் பரணி கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.இது நாகர்கோவிலில் இருந்து 23 கி மி தொலைவிலும்,குளச்சலில் இருந்து 7 கி மி தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75 கி மி தொலைவிலும் அமைந்துள்ளது.இங்கு நடைபெறும் பத்தாவது திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை ஆகும். 


கோயிலின் சிறப்பம்சம்
கோயில் அமைப்பு : ஆரஞ்சு கலரில் முகப்பு . ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில்.அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று.அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்.
மண்டையப்பம்: பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.

தல பெருமைகள் :
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மிகப் பிரலமான கோயில். 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு, இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள் தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்ேட வந்தது
கோயில் தடவைக்கு மேல் இடித்து கட்டப்பட்டுள்ளது. காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்
மாசிப் பெருந்திருவிழா 10 நாள் திருவிழா10 லட்சம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.

தல வரலாறு
சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றரார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை.எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார்.அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது.அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது.இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பரவ பக்தர்கள் பெரும்அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது. மாதாமாதம் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

பொது தகவல்கள்
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
 
நாகர்கோயில் 23 கி.மீ.
குளச்சலில் 7 கி.மீ.
திருவனந்தபுரம் 75 கி.மீ.
திருநெல்வேலி 95 கி.மீ.
தங்கும் வசதி : கோயிலில் விடுதி உள்ளது.
தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் நாகர்கோயில் நகரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கிக் கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
போக்குவரத்து வசதி : *தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து நாகர்கோயிலுக்கு நிறையபஸ் வசதி உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டைக்காடு கோயிலுக்கு செல்லலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் இரணியல், நாகர்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம்,



About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

 
Top