Subash Kumar Subash Kumar Author The part time Blogger love to blog on various categories
Title: பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? டிப்ஸ்
Author: Subash Kumar
Rating 5 of 5 Des:
            பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்.                                  tried home remedies...
            பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ். 
                                tried home remedies for eliminating vaginal odor
பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது. இந்த நாற்றத்திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.

பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதையடுத்து மோசமான துர்நாற்றமும் கிளம்பும். சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டியது ரொம்பவும் முக்கியம். என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிய முறைகளில் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும். இதோ அத்தகைய தீர்வுகள்...

நிறைய நீர் அருந்துங்கள் 
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது ரொம்பவும் ஈஸிதானே! பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைத் விரட்ட சிறந்த வழியுமாகும். இது இயற்கையாகவே பாக்டீரியாவையும் மற்ற நச்சுப் பொருட்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், தண்ணீர் அதைக் கரைத்து விடும்.

தயிர் 
பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தை நீக்குவதில் தயிரின் பங்கும் முக்கியமானது. தயிரில் லாக்டோபேசில்லஸ் அதிகம் இருப்பதால் 'அந்த' இடங்களில் பி.எச். அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நிறைய தயிர் சாப்பிடுங்கள். தயிரை பஞ்சில் நனைத்து பிறப்பு உறுப்புப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.

டீ ட்ரீ எண்ணெய் ( Tea Tree Oil )
டீ ட்ரீ எண்ணெயில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நிறைந்து இருப்பதால், அது துர்நாற்றத்தைக் கண்டிப்பாக நீக்கும். நீருடன் 2 ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெயைக் கலந்து, அதைப் பஞ்சில் ஊற வைத்து, பின்னர் அதை பிறப்பு உறுப்புப் பகுதியில் சில நிமிடங்கள் வைக்கவும். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இதை தினமும் செய்தால் நாற்றம் போகும்.

வெந்தயம் 
வெந்தயத்தைப் பொதுவாகவே மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். இது ஹார்மோன் அளவை சீராக வைக்க உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை உணவுக்கு முன் அந்த நீரைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இதைக் கடைப்பிடித்தால் நாற்றம் இருக்காது.

பூண்டு 
பூண்டில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி நிறைந்து உள்ளது. பூண்டை நைஸாக அரைத்து, அதை பிறப்புறுப்பு ஓரங்களில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளித்தால் துர்நாற்றம் பறந்து போகும்.

வேம்பு 
வேப்ப இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் நீரைக் குளிர வைத்து, பிறப்பு உறுப்புப் பகுதியில் அதைக் கொண்டு கழுவினால் நாற்றம் ஓடிப் போகும். நாற்றம் போக வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

வெள்ளை வினிகர் 
வெந்நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அரை கப் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பைக் கலந்து, அதில் பிறப்பு உறுப்புப் பகுதியைக் கழுவலாம். அப்பகுதியில் பி.எச். அளவைக் கட்டுப்படுத்த வல்லது வினிகர்.

ஆப்பிள் சிடர் வினிகர் 
மிதமான சுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டியில் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, அதில் பிறப்பு உறுப்புப் பகுதியைக் கழுவலாம். இந்த வினிகரில் பாக்டீரிய எதிர்ப்பு சக்தி இருப்பதால் நாற்றம் விலகும்.

உப்பு
குளியல் மிதமான சுடுநீரில் சிறிது எப்சம் உப்பைக் கலந்து, அதனைக் கொண்டு பிறப்பு உறுப்புப் பகுதியை கழுவினால் நாற்றம் போகும். ஒரு நாளுக்கு 2 முறை இதைக் கடைப்பிடிப்பது நலம்.

நெல்லிக்காய் 
நெல்லிக்காயை அப்படியே அல்லது ஊறுகாயாக அல்லது ஜூஸாக செய்து சாப்பிடுவதன் மூலம் பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைப் போக்கலாம். லூக்கோரியா என்ற பிறப்பு உறுப்பு நோய்த்தொற்றை நெல்லிக்காய் தடுக்கிறது.

சோடா உப்பு 
பிறப்பு உறுப்புப் பகுதியில் ஏற்படும் பல நோய்த் தொற்றுக்களை சோடா உப்பு சரி செய்கிறது. ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் சோடா உப்பைக் கலந்து குடித்தால் நாற்றம் போகும். சோடா உப்பை நீரில் கலந்து குளிப்பதும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள் 
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை மற்றும் அன்னாசிப் பழங்களை நிறைய சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்குவதால் பிறப்பு உறுப்பு நாற்றம் விலகிப் போகும்.

குளோரோபில் 
5 அல்லது 6 ஸ்பூன் திரவ குளோரோபில்லைக் குடித்த பின், நிறைய நீரையும் குடிக்க வேண்டும். குறைந்தது 2 வாரங்களுக்கு இதைக் கடைப்பிடித்தால் பிறப்புறுப்பு நாற்றம் நீங்கும்.
வெஜிஸில் பவுடர் ( vegisil Powder )
'வெஜிஸில் ஃபெமினைன் பவுடர்' மருந்துக் கடைகளில் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதைப் பூசுவதன் மூலம் நாற்றம் நீங்கும்.

நறுமணப் பொருட்கள் பொதுவாகவே உடல் நாற்றத்தைப் போக்க பெர்ஃப்யூம் எனப்படும் நறுமணப் பொருள் ஸ்ப்ரேக்கள் உதவும். முழங்காலிலிருந்து தொடைகளின் உள்பக்கம் வரை ஸ்ப்ரே செய்வதன் மூலம் பிறப்பு உறுப்பு நாற்றத்தைப் போக்கலாம்.



22 Aug 2014

About Author

Advertisement

Post a Comment Blogger Disqus

CLICK TO SELECT EMOTICON

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Chat here...