பொடுகு எதிர்ப்பு ஷாம்பு
வாரத்திற்கு
இரு முறை நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை முடிகளில் பயன்படுத்தவும். ஸ்கால்ப், காதுகள், முகம் என்று பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் இந்த ஷாம்பு
கொண்டு கழுவ வேண்டும். பொடுகுகள் மற்ற இடங்களில் படாதவாறு தலைமுடியைக் கழுவ
வேண்டும்.
கண்டிஷனர் ஷாம்பு போட்டுக் கழுவிய
பின்
கண்டிஷனர்களைப் பயன்படுத்தும் போது, அது
உச்சந்தலையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டிஷனரிலிருந்து வரும்
நுரைகளையும் தலைமுடியிலேயே தங்கிவிடாதவாறு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
முகத்தில் முடி படக் கூடாது
தலைமுடியில் உள்ள பொடுகுகள் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பருக்கள்
கண்டிப்பாக வந்துவிடும்.
சூடான எண்ணெய் மசாஜ்
வாரத்திற்கு ஒரு
முறை சூடான எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உச்சந்தலையை ஆரோக்கியமாக
வைத்திருப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் அதிகப்படுத்துகிறது. மேலும் இது உலர்ந்த செதில்களை
நீக்கவும், பளபளப்பாக வைத்திருக்கவும் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்
உச்சந்தலையில் சிறிது
எலுமிச்சை ஜூஸைத் தடவி, 30 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் நன்றாக தலைமுடியைக் கழுவ
வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
முடி ஸ்டைல் வேண்டாம்
தலைமுடிகளை
ஸ்டைலாக வைத்திருக்க உதவும் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி
முடியை உலர விட்டால் பொடுகுகள் பல்கிப் பெருகக் கூடும். பின்னர் அவை முகத்தைத்
தாக்கி, பருக்களை ஏற்படுத்தும்.
அடிக்கடி தலை சீவவும்
ஒரு நாளைக்கு 2 முறையாவது தலைமுடியை சீவ வேண்டும். அடிக்கடி தலைமுடியை
சீவுவதால், அதிலிருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
Post a Comment Blogger Facebook Disqus
CLICK TO SELECT EMOTICON
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.